Tamilnadu
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. மேலும் மக்களுக்கு தேவையானவற்றை கொடுக்காமல், மக்களை வஞ்சிக்கும் நோக்கில் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. அதோடு பாஜக ஆளாத மாநிலங்களை குறிவைத்தும் நிவாரணம் உள்ளிட்ட நல்ல திட்டங்களை வழங்காமல் ஓரவஞ்சனை காட்டி வருகிறது.
இதற்கு தொடர்ந்து மக்கள் மத்தியிலும், எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தபோதிலும், பாஜக திருந்தவில்லை. இந்த சூழலில்SIR என்று சொல்லப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம், பாஜக கூட்டணி ஆளும் மாநிலமான பீகாரில் நடத்தியது இந்திய தேர்தல் ஆணையம்.
இதைத்தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியல்படி, லட்ச கணக்கான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. அதோடு ஒரே முகவரியில் நூற்றுக்கணக்கான மக்கள் வசிப்பதாகவும், அதில் ஒரு சிலரின் தந்தை பெயர், ஏதாவது ஒன்று கொடுக்க வேண்டும் என்று ஆங்கில Alphabetical-ல் இருந்து எழுத்துகளை பதிவு செய்துள்ளனர்.
வாக்காளர் பட்டியல் திருத்தும் என்ற பெயரில் போலியாக பலரையும் சேர்த்ததோடு, இருப்பவர்களையும் நீக்கியுள்ளது தேர்தல் ஆணையம். இந்த முறைகேட்டை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்கள் மத்தியில் வெளிக்கொண்டு வந்தார். எனினும் இந்த முறைகேடு குறித்து தேர்தல் ஆணையம் முறையாக பதிலளிக்கவில்லை.
இந்த நிலையில், தற்போது தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு தமிழ்நாடு முழுவதும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. பாஜகவுக்கு வழக்கம்போல் சோம்பு தூக்கும் அதிமுக, இதற்கு ஆதரவு தெரிவித்தாலும், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அந்த வகையில் திமுக மாற்று கூட்டணி கட்சிகளின் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நவ.2-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (நவ 2) சென்னை, தி.நகரில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள கட்சிகளின் விவரம் வருமாறு :-
கழகப் பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு,
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்,
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்,
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்,
கொங்கு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்,
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன்,
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா
தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் பார்த்தசாரதி
எஸ்.டி.பி.ஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிருவாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
Also Read
-
தருமபுரி - ரூ.39.14 கோடியில் புதிய பேருந்து நிலையம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!
-
"மோடி நாட்டின் பிரதமர் என்பதை மறந்து பழைய குஜராத் கலவரக் காலத்திலேயே இருக்கிறார்" - முரசொலி விமர்சனம் !
-
சென்னை ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிஸ் ஜென்... கோப்பை வழங்கி முதலமைச்சர் பாராட்டு !
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!