Tamilnadu

சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு : 13 பிரிவில் சுற்றுலா விருதுகள்!

2025ஆம் ஆண்டு தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்கும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர் முன்னிலையில் இன்று (23.10.2025) சென்னை ஹோட்டல் லீலா பேலஸில், நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் 31 தொழில் நிறுவனங்கள், ஓட்டல்கள், டிராவல் நிறுவனங்கள், அரசுத்துறைகள் உள்ளிட்ட சுற்றுலா செயல்பாட்டாளர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்கி சிறப்பித்தார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்பான நடவடிக்கைகளால் தற்போது இந்தியாவிலேயே தமிழ்நாடு, சுற்றுலாத்துறையில் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகின்றது. நாட்டின் சமூக,பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலாத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.

சுற்றுலாப்பயணிகள் பலதரப்பட்ட அனுபவங்களை பெறுவதற்கு பொழுதுபோக்கு, திருவிழாக்கள், இசை, நடனம், உணவு வகைகள், சாகச விளையாட்டு, கல்வி, மற்றும் வணிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகியவை சுற்றுலாவின் தேவையை அதிகரித்துள்ளது.

உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் சுற்றுலா சந்தைகளில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை தொடர்ந்து பங்கேற்று, தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்களை பிரபலப்படுத்தி தமிழ்நாட்டிற்கு வருகை புரியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்திட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்வழிக்காட்டுதலின்படி, சுற்றுலாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கும் பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, கடந்த 2022ஆம் ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு சுற்றுலாத்துறை மூலம் கீழ்கண்ட 13 வகையான விருதுகள்

விருதுகளின் பட்டியல்:

1.தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர் (Best Inbound Tour Operator)

2.சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர் (Best Domestic Tour Operator)

3.சிறந்த பயண பங்குதாரர் (Best Travel Partner)

4.சிறந்த தங்குமிடம் (Best Accommodation)

5.சிறந்த உணவகம் (Best Restaurant)

6.தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சிறந்த தங்குமிடம் மற்றும் படகு இல்லம் (Tamil Nadu Tourism Development Corporation Star Performer)

7.சுற்றுலா ஊக்குவிப்பிற்கான சிறந்த மாவட்டம் (Tourism Promotion Award (Best District))

8.சுத்தமான சுற்றுலாத்தலம் (Cleanest Tourism Destination)

9.பல்வேறு சுற்றுலாப் பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளர் (Best Niche Tourism Operator)

10.பல்வேறு சுற்றுலாப் பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளர் மருத்துவம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலா நிறுவனம் (Best Niche Tourism Operator Medical and wellness tourism establishment )

11.சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம்கள் சுற்றுலா ஏற்பாட்டாளர் (Best Adventure Tourism and Camping site Operator)

12.சிறந்த சுற்றுலா வழிகாட்டி (Best Tourist Guide)

13.சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம் (Best Educational Institution for Tourism and Hospitality)

31 தொழில் நிறுவனங்கள், ஓட்டல்கள், டிராவல் நிறுவனங்கள், அரசுத்துறைகள் உள்ளிட்ட சுற்றுலா செயல்பாட்டாளர்களுக்கு அமைச்சர் பெருமக்களால் வழங்கப்பட்டன.

Also Read: “அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடியில் திட்டம்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!