Tamilnadu
வாக்கு திருட்டு : ஒரு போலி விண்ணப்பத்திற்கு ரூ.80 - சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் அம்பலம்!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், வாக்குத் திருட்டு தொடர்பான குற்றச்சாட்டை முன்வைத்து, ஆதாரத்தை வெளியிட்டார். மேலும், இந்த வாக்குத் திருட்டுக்கான கூடுதல் ஆதாரங்கள் வெளியிடப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
வாக்காளர் நீக்கத்துக்கான படிவம் 7-ஐ முறைகேடாக பயன்படுத்தி, 5 ஆயிரத்து 994 மோசடி விண்ணப்பங்கள் கண்டறியப்பட்ட நிலையில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணைக்குத் தேவையான ஆவணங்களில் ஒரு பகுதியை தேர்தல் ஆணையம் வழங்கியது.
ஆனால் முக்கிய ஆவணங்களை வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதனால், வாக்குத் திருட்டின் பின்னணியில் உள்ளவர்களை தேர்தல் ஆணையம் பாதுகாப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், கலபுரகி மாவட்டம் ஆலந்த் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் குறித்த விவரங்களை சிறப்பு புலனாய்வு குழு கண்டறிந்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்க போலி விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொரு போலி விண்ணப்பத்திற்கும் ஒரு தரவு மையத்திற்கு 80 ரூபாய் வீதம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.
2022 டிசம்பர் முதல் 2023 பிப்ரவரி வரை வாக்காளர் பெயர் நீக்கத்திற்காக மொத்தம் 6 ஆயிரத்து 18 போலி விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு மொத்தமாக அந்த தரவு மையத்திற்கு 4 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாகவும் சிறப்பு புலனாய்வு குழு மதிப்பிட்டுள்ளது. இந்த தகவல்கள் கர்நாடக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
“தேன்மொழி சௌந்தரராஜனின் சமூகப்பணி தொடரட்டும்!” : வைக்கம் விருது அறிவிப்பையடுத்து கனிமொழி எம்.பி வாழ்த்து!
-
பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்ய பார்க்கும் பழனிசாமி: துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி!
-
சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு : 13 பிரிவில் சுற்றுலா விருதுகள்!
-
“அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடியில் திட்டம்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
திராவிட மாடலில் உழவர்கள் பெற்ற நலன்! : வேளாண் திட்டங்களை பட்டியலிட்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!