Tamilnadu

மும்பையில் தொடரும் கனமழை... சென்னையில் இருந்து செல்லும் விமானங்கள் ரத்து, தாமதம் - விவரம் உள்ளே !

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், பலத்த மழை பெய்து கொண்டு இருப்பதால் அங்கு விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மும்பையில் இருந்து இன்று மாலை 5.35 மணிக்கு, சென்னைக்கு வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னையில் இருந்து இன்று மாலை 6.20 மணிக்கு, மும்பைக்கு புறப்பட்டு செல்லும், இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் இன்று ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை பலத்த மழை காரணமாக, இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று அதிகாலை 5.10 மணிக்கு, மும்பையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், காலை 8 55 மணிக்கு மும்பையில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம் தாமதமாக இயக்கப்பட்டது.

அதைப்போல் சென்னையில் இருந்து காலை 9.35 மணிக்கு, மும்பை செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், மாலை 3 மணிக்கு, சென்னையில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் என மொத்தம் 4 வருகை, புறப்பாடு விமானங்கள், தாமதமாக இயக்கப்படுகின்றன.

இந்த விமானங்கள் ரத்து மற்றும் தாமதங்கள் குறித்து, இண்டிகோ ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா விமான நிறுவனங்கள், பயணிகளுக்கு முன்னதாகவே அறிவிப்பு கொடுத்து, அவர்கள் மாற்று விமானங்களில், பயணிக்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்... இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளரை அறிவித்தார் மல்லிகார்ஜுன கார்கே !