Tamilnadu
சைபர் குற்றத்தில் சிக்கிய ரூ.1.65 கோடி, ஒரே மாதத்தில் மீட்பு! : சென்னை பெருநகர காவல்துறை தகவல்!
சென்னை பெருநகர காவல், சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் மூலமாக பல்வேறு சைபர் குற்ற நிகழ்வுகளில் பாதிக்கப்படும் பொதுமக்களின் புகார்களை 1930 என்ற அவசர அழைப்பு மூலமாக அல்லது நேரடியாக வழங்கப்படும் புகார்களை பெற்று துரிதமாக நவீன தொழிற்நுட்பத்துடன் கூடிய விசாரணை மூலம் பணம் இழந்தவர்களுக்கு உடனடியாக அவர்களின் பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு மற்றும் கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு மண்டலங்களின் இணை ஆணையாளர்கள் மேற்பார்வையில் செயல்பட்டு வரும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் மூலம் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சைபர் கிரைம் புகார் சார்ந்த வழக்குகளில் எதிரிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டும், இணைய வழி மூலமாக பல்வேறு சமூக வலைதள பதிவு மற்றும் தரவுகள் மூலம் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சைபர் குற்றவாளிகளின் உரிய தொடர்புகளை கண்டறிந்து வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, இழந்த பணத்தொகையை மீள இழந்தவர்கள் வங்கி கணக்கில் மீட்டு வழங்குவதிலும், இழந்தவர்களுடைய பணத்தை மற்றொரு வங்கி கணக்கில் அனுப்பகோரி சிலர் ஏமாற்றப்பட்டிருப்பதும், வழக்கு சார்ந்து வங்கி கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டு உரிய நீதிமன்ற நடவடிக்கை மூலம் மீள பெற்று தருவதிலும் சென்னை பெருநகர காவல் துறை முன்னிலை வகிக்கிறது.
சென்னை பெருநகர காவல், சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் அதிகாரிகள் திறம்பட துரிதமாக விசாரணை மேற்கொண்டு கடந்த ஜுலை மாதம் (01.07.2025 முதல் 31.07.2025 வரை) சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தாக்கலான 35 புகார் மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு ரூ.90,67,507/- மீட்கப்பட்டும், வடக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட 18 புகார் மனுக்களில் ரூ.13,43,467/- மீட்கப்பட்டும்;
மேற்கு மண்டலத்தில் பெறப்பட்ட 32 புகார் மனுக்களில் ரூ.15,71,276/- மீட்கப்பட்டும், தெற்கு மண்டலத்தில் பெறப்பட்ட 58 புகார் மனுக்களில் ரூ.23,70,292/- மீட்கப்பட்டும், கிழக்கு மண்டலத்தில் பெறப்பட்ட 48 மனுக்களில் ரூ.21,77,692/-மீட்கப்பட்டும் மொத்தமாக 191 புகார்தாரர்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு மொத்தம் பணம் ரூ. 1,65,30,234/- (ரூ.பாய் ஒரு கோடியே அறுபத்தைந்து இலட்சத்து முப்பதாயிரத்து, இருநூற்று முப்பத்து நான்கு) மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் நடப்பு 2025ம் ஆண்டு 31.07.2025 வரை ரூ.18,08,61,565/- மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் இணைய வழி பண பரிமாற்றம் செய்யும்பொழுது மிகுந்த விழிப்புணர்வுடனும், அனுப்பும் தொடர்புகளில் உரிய நம்பகத்தன்மை அறிந்து பயன்படுத்திடவும், உரிய புகார்களுக்கு 1930 எண்ணை தொடர்பு கொள்ளவும், www.cybercrime.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
Also Read
-
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு... Fastag இல்லையென்றால் இருமடங்கு கட்டணம்.. வருகிறது புதிய நடைமுறை!
-
”திராவிடர் கழகத்தின் நீட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
”தேசத்தை காக்க தி.க, தி.மு.க தான் மருந்து” : சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாட்டில் ஆ.ராசா.எம்.பி பேச்சு!
-
இனி பழைய பொருட்களை அகற்ற கவலை வேண்டாம் : சென்னை மாநகராட்சியின் அசத்தலான திட்டம்!
-
துன்பம் வரும்போது நம்மைக் காப்பவர் யார்? கைவிடுவோர் யார்? : மக்களுக்கு உணர்த்திய கரூர் துயரம்!