Tamilnadu

“ஓரணியில் தமிழ்நாடு” : கல்லூரி மாணவர்களிடையே பிரச்சாரத்தை தொடங்கும் கழக மாணவரணி... முழு விவரம் உள்ளே !

தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் “ஓரணியில் தமிழ்நாடு” எனும் பிரச்சார இயக்கத்தை ஜுலை முதல் நாளன்று தொடங்கிவைத்தார்கள். மக்களின் பேராதரவுடன் “ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்” மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதன் தொடர்ச்சியாக இந்த பிரச்சாரத்தை கல்லூரி மாணவர்களிடையே கொண்டுசெல்லும் வகையில் ழக மாணவர் அணி சார்பில் கல்லூரிகளில் இந்த பிரச்சாரத்தை முன்னெடுக்க கழக மாணவரணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், " தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின்படி; தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்பேரில் கழக மாணவர் அணி சார்பில் கழக மாவட்டந்தோறும் ஓரணியில் தமிழ்நாடு என்ற கழக உறுப்பினர் சேர்க்கை இயக்கம் குறித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள், கல்லூரி மாணவர்களிடையே மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்புகளின் மாணவர் அணி நிர்வாகிகள் மூலம் துண்டுப் பிரசுரங்கள் மூலம் விழுப்புணர்வை ஏற்படுத்தும் பரப்புரையை மேற்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டு, தொடக்கமாக ஜூலை 21ஆம் தேதி மாநிலச் செயலாளர் இரா.ராஜீவ்காந்தி கோவை அரசுக் கலைக் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வுப் பிரசாரத்தைத் தொடங்கி வைக்கிறார்கள்.

இந்தப் பிரசாரத்தைத் தமிழ்நாடு முழுவதும் வாய்ப்புள்ள அனைத்துக் கல்லூரிகளில் கழக மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் அவர்களது தோழர்களுடன் பெருந்திரளாக பங்கேற்று, மேற்கொள்வார்கள் எனத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: மத கலவரத்தை தூண்டும் விதமாக பேச்சு... முன் ஜாமின் வழக்கில் மதுரை ஆதீனத்துக்கு விதித்த நிபந்தனைகள் என்ன ?