Tamilnadu

பீகார் - வாக்காளர் பட்டியல் சீரமைப்பு முறை ஆபத்தானது : இந்திய தேர்தல் ஆணையம் மீது தேஜஸ்வி புகார்!

பீகாரில் வாக்காளர் பட்டியலை மறு சீரமைப்பதற்காக எஸ்.ஐ.ஆர் எனும், Special intensive revision எனும் நடைமுறையை இந்திய தேர்தல் ஆணையம் பின்பற்றி வருகிறது. இதற்கு காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை மறு சீரமைப்பது கண்டனத்திற்குரியது என கூறியுள்ளார்.

அரசியல் கட்சியினரை ஆலோசிக்காமல் இந்திய தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக மறு சீரமைப்பு முறையை மேற்கொண்டுள்ளதாகவும் தேஜஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த நடைமுறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த போது, உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியதாகவும் ஆனால், அதனை இந்திய தேர்தல் ஆணையம் புறக்கணித்துள்ளதாகவும் தேஜஸ்வி புகார் கூறினார்.

பீகாரில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் சீரமைப்பு முறை ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Also Read: ”கீழடி அகழாய்வு அறிக்கையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது” : அமர்நாத் ராமகிருஷ்ணன் !