Tamilnadu
“ரயில்வே கேட் திறந்துதான் இருந்தது!” : பள்ளி வாகன விபத்தில் உயிர் தப்பிய ஓட்டுநர், மாணவர் வாக்குமூலம்!
கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி வாகனம் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 3 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஒரு சிறுவர் உயிரிழந்துள்ளார். 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து, ரயில்வே துறை சார்பில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், “ரயில் மோதி பள்ளி வாகனம் விபத்துக்குள்ளானதற்கு ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததே காரணம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “பள்ளி வாகன ஓட்டுநர் வற்புறுத்தியதால்தான் கேட்டை திறந்துள்ளார் ரயில்வே பணியாளர்” என்ற தகவலையும் வெளியிட்டது.
தொடர்ந்து, தமிழ்நாடு காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட விசாரணையில், விபத்தில் சிக்கி உயிர் தப்பிய மாணவர் மற்றும் பள்ளி வாகன ஓட்டுநர் இருவரும், “ரயில்வே கேட் திறந்துதான் இருந்தது” என வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து தி.மு.க நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “கடலூரில் பள்ளி வாகனம் மீது இரயில் மோதிய விபத்தில் இரு குழந்தைகள் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். இத்துயர்மிகு வேளையில், அக்குடும்பங்களின் கரம்பற்றி எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளும் விரைந்து நலம்பெற விழைகிறேன்.
இந்த நாட்டில் மொத்தமுள்ள 68,584 கி.மீ தூரம் ரயில்வே வழித்தடத்தில் வெறும் 1,548 கி.மீ மட்டுமே 'கவாச்' பாதுகாப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது என்பதைப் பலமுறை சுட்டிக்காட்டிவிட்டோம். இத்தனை விபத்துகள் நேர்ந்த பின்னும், ஒன்றிய அரசுக்கு இதில் துளியளவும் கவலை இல்லை” என குற்றம் சாட்டியுள்ளார்.
Also Read
-
பாஜக வழக்கறிஞருக்கு 4 மாதம் சிறை தண்டனை... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி - காரணம் என்ன ?
-
தொழில் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியல்... திராவிட மாடல் ஆட்சியால் முதலிடம் பிடித்த தமிழ்நாடு !
-
போதைப் பொருள் வழக்கு... நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமீன் - நீதிமன்றத்தின் நிபந்தனை என்ன ?
-
”தமிழ் இலக்கியப் பரப்பில் என்றும் தனித்து ஒளிரும் நட்சத்திரம் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!
-
"அதிமுக தொண்டர்களுக்கே அக்கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்தது பிடிக்கவில்லை" - அமைச்சர் KN நேரு !