Tamilnadu

”இருட்டில் இருப்பது எடப்பாடி பழனிசாமிதான்” : அமைச்சர் துரைமுருகன் பதிலடி!

இருட்டில் இருப்பது பழனிசாமிதான் என எதிர்க்கட்சி தலைவருக்கு, அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன்,” கால்வாய்கள் தூர்வாரப்படாததால் கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை என எதிர்க்கட்சி தலைவர் பொய் சொல்கிறார்.

அவருக்கு என்ன தெரியும். கடைமடை வரை தண்ணீர் சென்றுவிட்டது. எடப்பாடி பழனிசாமியை போய் பார்க்கச் சொல்லுங்கள். ”இருளை அகற்றி தமிழகத்தை ஒளி வீசச் செய்வதே என்னுடைய தீராத ஆசை" என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார்.

உண்மையில் இருட்டில் மாட்டிக் கொண்டிருப்பது அவர்தான். இருட்டில் மட்டுமல்ல, இக்கட்டிலும் மாட்டிக் கொண்டிருப்பதும் இரண்டுமே எடப்பாடி பழனிச்சாமி தான்” என தெரிவித்தார்.

Also Read: “தமிழ்நாடு அங்கன்வாடி குறித்து பரப்பப்படும் தவறான தகவல்!” : அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!