Tamilnadu

இன்று ஒரே நாளில் 8 விமானங்கள் திடீர் ரத்து : காரணம் என்ன? - பயணிகள் கடும் அவதி!

சென்னை விமான நிலையத்தில் இருந்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் தினமும் வந்து செல்கின்றன. இதனால் விமான நிலையம் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும்.

இந்நிலையில் இன்று இன்று காலை 8 மணிக்கு, மும்பைக்கு செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், காலை 9.45 மணிக்கு டெல்லிக்கு செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், காலை 10.10 மணிக்கு சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் ஸ்பைஸ் ஜெட் பயணிகள் விமானம், இன்று இரவு 8.40 மணிக்கு, சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

மேலும, ஹைதராபாத்தில் இருந்து இன்று அதிகாலை 1.40 மணிக்கு, சென்னைக்கு வரவேண்டிய ஸ்பைஜெட் ஏர்லைன்ஸ் விமானம், டெல்லியில் இருந்து காலை 9.05 மணிக்கு, சென்னைக்கு வரவேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், தூத்துக்குடியில் இருந்து பகல் 1.45 மணிக்கு, சென்னை வரவேண்டிய ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் விமானம், இன்று இரவு 7.10 மணிக்கு, டெல்லியில் இருந்து சென்னை வரவேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஆகிய 4 வருகை விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

இன்று ஒரே நாளில் 8 விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதில் 5 விமானங்கள், ஏர் இந்தியா விமானங்கள் 3 விமானங்கள், ஸ்பைஜெட் விமானங்கள் ஆகும்.

இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்று இதுவரையில் சம்மந்தப்பட்ட நிர்வாகத்திடம் இருந்து அறிவிப்பு எதுவும் வரவில்லை. நிர்வாக காரணம் என்று மட்டும் சொல்லப்படுகிறது.

தொழில்நுட்ப கோளாறு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக கடந்த ஒரு வாரமாகவே விமானங்கள் அடிக்கடி ரத்து செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தை அடுத்து, விமானங்களின் பாதுகாப்பு கூடுதல் கவனத்துடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

Also Read: சாலையில் திருதிருவென முழித்து நின்ற நபர்.. 11 கிராம் கொக்கைன் பறிமுதல்.. ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் கைது!