Tamilnadu
சென்னையில் வணிக வளாகங்களுடன் கூடிய மெட்ரோ நிலையம்... வெளியான மாதிரி புகைப்படங்கள் !
சென்னையில் பெருநகர் மற்றும் புறநகரை இணைக்கும் வகையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் உள்ள நிலையங்களில் வணிக வளாகங்கள் அமைக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டது.
இதில் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்துடன் கூடிய 9 மாடி கட்டிடத்தின் மாதிரி படங்கள் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் வணிக வளாகத்துடன் கூடிய 9 மாடிகளை கொண்ட 3 கட்டடங்கள் கட்டப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் மையமாக ஒருங்கிணைக்கப்பட்ட 2 மாடிகளை கொண்ட ரயில் நிலையம் அமைகிறது. வணிக கட்டிடங்களின் 4வது தளத்தில் மெட்ரோ ரயில் நிலையம், 5 மற்றும் 6வது தளத்தில் மெட்ரோ ரயில்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் சுமார் 6.85 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த கட்டத்தில் பல்வேறு அலுவலகங்கள், சில்லறை விற்பனை கடைகள் மற்றும் 3 நிலைகளில் சுரங்க வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறான அமைப்பு இந்தியாவில் வணிக வளாகங்களின் வழியாக மெட்ரோ ரயில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும் என மெட்ரோ நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது..
Also Read
-
“அவதூறு பிரச்சாரத்தை கட்டவிழ்த்து நீலிக்கண்ணீர் வடிக்கிறார் பழனிசாமி” : அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி!
-
சென்னை பறக்கும் ரயில் நிறுவனத்தை மெட்ரோவுடன் இணைப்பது எப்போது? - கனிமொழி MP கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்!
-
"திராவிட மாடல் ஆட்சியில் கோயம்புத்தூர், மதுரை IT நகரங்களாக உருப்பெறுகிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
இனி பேரிடர் குறித்து கவலையில்லை... நாசாவுடன் சேர்ந்த இஸ்ரோ : விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள் !
-
நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம் : "நாடாளுமன்றம் முடிவு செய்யட்டும்" - உச்சநீதிமன்றம் கருத்து !