Tamilnadu

ரூ.500 கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு! : சொல்வதை செய்துகாட்டும் திராவிட மாடல்!

தமிழ்நாடு அரசும், ஜெர்மனி நாட்டின் பெஸ்டோ நிறுவனமும் 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் போட்டுக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, ஒசூரில் ரூ.500 கோடியில் தானியங்கி பொருள் உற்பத்தி நிறுவனத்தை இரண்டே ஆண்டுகளில் கட்டி முடித்து அதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நடைபெற்றது.

இந்த திறப்பு விழாவில் பெஸ்டோ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்கள் ரஷ்மிகாந்த் ஜோஷி மற்றும் ரவிசாஸ்த்ரி மற்றும் மோகன்குமார் ஆகியோர் தெரிவிக்கையில்,

“தொழில் சார்ந்த தானியங்கி நுட்பம் மற்றும் தொழில்நுட்பக் கல்வியில் உலகளாவிய முன்னணிக் குழுமமான பெஸ்டோ அதன் நூற்றாண்டு விழாவைக் குறிப்பிடும் வகையில் தமிழ்நாட்டில் ஒசூரில் உலகத் தரத்திலான உற்பத்தித் நிறுவனத்தை திறந்துள்ளது.

தானியக்கமும், கல்வியும் எனும் துறைகளில் புதுமை, சிறப்புத்திறன் மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு பெஸ்டோ கடந்த நூற்றாண்டாக அளித்த அர்ப்பணிப்பை செய்து வருகிறது.

இந்த புதிய தொழிற்சாலை ரூ.500 கோடி மூலதன முதலீட்டில் ஒசூர் அருகே பைரமங்கலத்தில் சுமார் 75 ஏக்கரில் தொழில் நிறுவனத்தை அமைத்துள்ளது. உள்நாட்டு மற்றும் உலக சந்தைகளுக்கான மிகத் துல்லியமான தானியங்கி தீர்வுகளை வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெஸ்டோ உற்பத்தித் திறன்களை மேம்படுத்தும் நோக்குடன் வடிவமைக்கப்பட்ட இந்தத் தொழிற்சாலையில் தொடக்கத்திலேயே 1000க்கும் மேற்பட்டோருக்கு நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்க உள்ளது.

மறைமுகமாக, மேலும் 1000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும் வருங்காலங்களில் தொழில்சாலை விரிவாக்கும் செய்யும்போது பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். சர்வதேச தரத்திற்கேற்ப நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்ட இந்தத் நிறுவனம் உயர்தர நியூமாடிக் தானியங்கி பொருள்கள் உற்பத்தியில் கவனம் செலுத்தும்.

இங்கு உற்பத்தி செய்யும் மருத்துவ உபரணங்கள், எலக்ட்ரானிக்ஸ், தானியங்கி பொருள்களை உள்நாட்டிலும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஜெர்மனி, தென்ஆப்பிரக்கா, அங்கேரி, சீனா உள்ளிட்ட 50 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றோம். கர்நாடக மாநிலத்தில் இட நெருக்கடி காரணமாக ஒசூரில் புதிய தொழில்சாலையை அமைத்து அதிக அளவில் வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றோம்” என்றார்.

பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டு எல்லையில் உள்ள ஒசூரை நோக்கி வரும் பல நிறுவனங்களில் ஜெர்மனி நிறுவனமான பெஸ்டோ நிறுவனம் மிகவும் முக்கியத்தவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Also Read: மேட்ச் பிக்சிங் செய்து தேர்தலில் பா.ஜ.க எப்படி முறைகேடு செய்கிறது? : மோடியின் முகத்திரையை கிழித்த ராகுல்!