Tamilnadu

862 மருத்துவ முகாம்கள் - ’நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் : 5 முக்கிய அம்சங்கள் என்ன?

"நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 1256 உயர் மருத்துவ சேவை முகாம்கள் செயல்படுத்திட நிதி ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில், உயர் மருத்துவ சேவைகள் வழங்க 862 மருத்துவ முகாம்கள் ரூ12.78 கோடி செலவில் செயல்படுத்தப்படும்" என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனை செயல்படுத்தும் வகையில், ஜூன் 2025 முதல் பிப்ரவரி / மார்ச் 2026 வரை 1256 உயர் மருத்துவ சேவை முகாம்கள், ஒரு வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம் 388 வட்டாரங்களில் 1164 முகாம்களும், ஒரு மண்டலத்திற்கு ஒரு முகாம் வீதம் பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 முகாம்களும்,

ஒரு மாநகராட்சிக்கு 4 முகாம்கள் வீதம் 10 இலட்சம் மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள 5 மாநகராட்சிகளில் 20 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 3 முகாம்கள் வீதம் மக்கள் தொகை 10 இலட்சத்திற்கு குறைவாக உள்ள 19 மாநகராட்சிகளில் 57 முகாம்களும் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

40 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மன நல பாதிப்புடையோர், இதய நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சிக் குன்றிய குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்டவர்கள்.

பழங்குடியினர் மற்றும் சமூக-பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்கள் ஆகியோரை இலக்காகக் கொண்டு இம்முகாம்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: ”தொகுதி மறுசீரமைப்புக்காக கலர் கலராக ரீல் விடுகிறார் பழனிசாமி” : அமைச்சர் ரகுபதி பதிலடி!