Tamilnadu
10 விமானங்கள் திடீர் ரத்து : பயணிகள் அவதி - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
சென்னையில் இருந்து இன்று மாலை 5.30 மணிக்கு டெல்லி செல்லும் ஏர் இந்தியா, இரவு 8.35 மணிக்கு கொச்சி செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இரவு 9.20 மணிக்கு புனே செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இரவு 9.45 மணிக்கு, டெல்லி செல்லும் ஏர் இந்தியா, இரவு 9.55 மணிக்கு ஹைதராபாத் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய 5 புறப்பாடு விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதை போல் மாலை 4.35 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா, இரவு 8.40 மணிக்கு டெல்லியில் இருந்து வரும் ஏர் இந்தியா, இரவு 9.05 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இரவு 11.50 மணிக்கு கொச்சியிலிருந்து வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், நள்ளிரவு 12.35 மணிக்கு புனேயில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய 5 வருகை விமானங்களும் இன்று திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் இன்று 5 புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள் என மொத்தம் 10 ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி கொண்டு இருக்கின்றனர்.
இந்த விமானங்கள் திடீர் ரத்துக்கு என்ன காரணம்? என்று இதுவரையில் விமான நிறுவனங்கள் அறிவிக்கவில்லை. ஆனால் இந்த விமானங்கள், நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
Also Read
-
ரூ.5,000 கோடி கொள்ளையடித்த பிரேம்குமாருக்கும், முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு? : உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
“அவுட்சோர்சிங் முகமை நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்” : த.வெ.க அரசுக்கு CPM வலியுறுத்தல்!
-
”ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக மாற்றி இருக்கும் காவல்துறை” : ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
-
அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்த சோதனையில் எந்த ஆவணங்களையும் கைப்பற்றவில்லை! : கே.என்.நேரு பேட்டி!
-
ரூ.5,000 கோடி நிதி மோசடி - சென்னையில் தொழிலதிபர் பிரேம் குமார் கைது!