Tamilnadu

பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் : தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் SETC !

கோடை விடுமுறை காலங்களில் பொதுமக்கள் அதிகளவில் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்வதால் அதனை கருத்தில் கொண்டு தனியாரிடமிருந்து படுக்கை வசதி கொண்ட பேருந்துகளை வாடகைக்கு பெற்று இயக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் முடிவுசெய்த்துளது.

இதற்கான டெண்டர் போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.ஏற்கனவே விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில், தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அரசு விரைவில் போக்குவரத்து கழகம் சார்பிலும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

சீசன் காலங்களில் பொதுமக்களின் வருகையை சாதகமாக்கிக் கொண்டு ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையிலும் போக்குவரத்து துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

முதல் கட்டமாக 20 தனியார் ஆம்னி பேருந்துகளை வாடகைக்கு பெற்று மே முதல் வாரத்தில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பயணிகள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இந்த பனி விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தகப் பூங்கா: மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு ! முழு விவரம் என்ன ?