Tamilnadu
”அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்கு இஸ்லாமியர்கள் வாக்களிக்க மாட்டார்கள்” : காதர் மொய்தீன் பேட்டி!
”இஸ்லாமிய மக்களுக்கு எதிராக வக்ஃப் திருத்த சட்டத்தை கொண்டுவந்துள்ள பா.ஜ.கவுடன், அ.தி.மு.க கூட்டணி வைத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்கள் இனிமேல் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் வாக்களிக்க மாட்டார்கள்” என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய,” ஒன்றிய அரசின் வக்ஃப் சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து எதிர் கட்சிகளும் வழக்கு தொடுத்து இருக்கிறார்கள்.
இஸ்லாமிய மக்களுக்கு தொர்ந்து அநீதி இழைத்து வரும் பா.ஜ.கவுடன், அதிமுக மீண்டும் கூட்டணிவைதுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்கள் இனிமேல் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் வாக்களிக்க மாட்டார்கள். ஏன் ஒரு இஸ்லாமிய வாக்குக்கூட இந்த கூட்டணிக்கு கிடைக்காது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பா.ஜ.கவை துணிச்சலுடன் எதிர்த்து நின்றார். ஆனால் அவர் மறைந்தபிறகு அதிமுகவை, பாஜகவிடம் அடகுவைத்துவிட்டார்கள். சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணியை தமிழ்நாட்டு தோற்கடித்து பதிலடி கொடுப்பார்கள்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
சென்னை நுங்கம்பாக்கத்தில் ‘ஜெய்சங்கர்’ பெயரில் சாலை! : தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு!
-
கல்வித்தகுதியை பொது வெளியில் சொல்ல பிரதமர் மோடிக்கு என்ன தயக்கம்? : ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!
-
தேசிய நலனுக்கு மாறாக பாகிஸ்தானுடன் கிரிக்கெட் மட்டும் விளையாடலாமா? : காங்கிரஸ் கேள்வி!
-
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! : 20.59 லட்சம் தொடக்கப் பள்ளி மாணாக்கர்கள் பயன்பெறுவர்!
-
”மிரண்டு இருக்கும் நயினார் நாகேந்திரன்” : கடுமையாக சாடிய அமைச்சர் சேகர்பாபு!