Tamilnadu
”உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பொருந்தக்கூடியது : The Hindu தலையங்கம்!
தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மாநில சுயாட்சியை வலுப்படுத்தும் என்று தி இந்து ஆங்கில நாளிதழ் பாராட்டு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மாநில சுயாட்சியை வலுப்படுத்தும் என்று தி இந்து ஆங்கில நாளிதழ் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பு, சட்டத்தை நிலைநாட்டுவதில் முக்கிய மைல்கைல் என்றும் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
தி இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள தலையங்கத்தில்,தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான மாநில அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சுட்டிக்காட்டியுள்ளது.
அதில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாட்டை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளதை குறிப்பிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கூட்டாட்சியையும், மாநில சுயாட்சியையும் வலுப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு, சட்டத்தை நிலைநாட்டுவதில் முக்கிய மைல்கைல் என்றும் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பொருந்தக்கூடியது என்று கூறப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு ஏவி விடும் ஆயுதம் போல் இல்லாமல், மாநில அரசுகளுக்கு ஒரு நண்பராகவும், வழிகாட்டுபவராகவும் ஆளுநர்கள் செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பு ஆளுநர்களின் பணிகள், கடமைகள், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் உள்ள அதிகாரம் என்ன என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், ஆளுநர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளதாகவும் தி இந்து ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது. ஆளுநர்கள், மாநில அரசுகளோடு இணைந்து செயல்பட வேண்டுமே தவிர, ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படக்கூடாது என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவுப்படுத்தியுள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், குடியரசுத்தலைவருக்கு அவை அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசின் உறுதியான மற்றும் திடமான வாதத்தால் ஒரு சிறப்புமிக்க தீர்ப்பு கிடைத்துள்ளதாகவும், ஒரு பதவியில் இருப்பவர் தனக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பு வந்ததும், அந்த பதவியில் இருந்து விலகுவதுதான் நியானமான செயல் என்றும், ஆனால் தமிழ்நாட்டில் மாநில அரசுக்கு எதிராக அரசியல் செய்வதற்காக வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவி விலகல் போன்ற செயலை ஒருபோதும் செய்ய மாட்டார் என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் நிறுத்தி வைத்த மசோதாக்களுக்கு தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது என்றும் தி இந்து ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!