Tamilnadu
”அ.தி.மு.க-விற்கு நீட் குறித்து அக்கறை இல்லை” : அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
நீட் தேர்வு முறையை அகற்றி, தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி கனவோடு பயிலும் இலட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கனவை நனவாக்க தமிழ்நாடு அரசு உறுதியோடு சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட, அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்படும் என்று 4.4.2025 அன்று சட்டமன்றப் பேரவையில் அறிவித்தார்.
அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (9.4.2025) தலைமைச் செயலகத்தில், நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பான அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு “நீட்” தேர்வு முறையிலிருந்து விலக்கு அளிப்பதற்காகத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றிய சட்டமுன்வடிவிற்கு மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் ஒப்புதல் தர மறுத்துள்ள நிலையில், இந்த விலக்கைப் பெறுவதற்காகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்தவேண்டும் என்று அனைத்து கட்சிகளும் ஒருமனதாக தீர்மானித்துள்ளது.
பின்னர் செய்தியாளர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”தமிழ்நாட்டில் நீட் விலக்கு சட்டப்போராட்டம் குறித்த முயற்சிகளை எடுத்துரைத்தோம். தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய தீர்மானத்திற்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். நேற்றய தினம் மாநில உரிமையை மீட்டெடுத்தது போல் நீட் விவகாரத்திலும் நமது உரிமையை மீட்டெடுப்போம் என அனைத்து கட்சியினருன் தெரிவித்துள்ளனர். அதிமுக ஆட்சியில்தான் நீட் தேர்வு கொண்டு வந்தனர் அதனால் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அதேபோல் அமைச்சர் ரகுபதில், ”சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கருத்தை கேட்டுள்ளார். நீட் விலக்கு ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளோம். ஜிப்மர், எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜிப்மர், எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு அளித்துள்ள விலக்கு ஏன் தமிழ்நாடு அரசுக்கு அளிக்க முடியாது.
கடந்த காலத்தில் நீட் தேர்வு முதுநிலை மருத்துவ படிப்பில் 0 மதிப்பெண் எடுத்தவர்கள் தேர்ச்சி என கூறும் போது ஏன் நீட் விலக்கு அளிக்க கூடாது. கல்வி பொதுப்பட்டியலிலிருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வரப்படும் என அனைத்து கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். நீட் விலக்கு பெற வேண்டிய அனைத்து நடவடிக்கையை எடுப்போம். பாஜகவுடன் கூட்டணிக்கான அச்சாரம் வைத்துள்ள நிலையில் அதிமுக நீட் குறித்து அக்கறை இல்லை" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
"ஆளுநர்கள் கால வரம்பு இல்லாமல் மசோதாக்களை நிலுவையில் வைக்க முடியாது" - தலைமை நீதிபதி கருத்து !
-
Twist வைத்த Bigg Boss; கதறி அழுத சாண்ட்ரா... BB வீட்டில் இருந்து வெளியேறும் பிரஜின்?
-
திட்டங்களால் பயனடைந்த லட்சக்கணக்கான மாணவர்கள்... திராவிட மாடல் ஆட்சியில் ஜொலிக்கும் பள்ளிக்கல்வித்துறை !
-
4 தென் மாவட்டங்களுக்கு Orange Alert.. 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை... என்னென்ன பகுதிகள்? - விவரம்!
-
”முதலமைச்சருக்கு தாய்மார்கள் எப்போதுமே பக்கபலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்...” -துணை முதலமைச்சர்!