Tamilnadu
சேலம் பெரியார் பல்கலை. விவகாரம் : துணைவேந்தர் மீதான வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு !
சேலம் பெரியார் பல்கலைக்கழக விதிகளை மீறி, அரசு அனுமதி பெறாமல், பெரியார் பல்கலைகழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேசன் (PUTER Foundation) என்ற அமைப்பை அரசு நிதியில் தொடங்கியுள்ளதாகக் கூறி, துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக பல்கலைகழக ஊழியர் சங்கத்தின் (PUEU) சார்பில் இளங்கோவன் என்பவர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
இந்த அமைப்பு குறித்து கேள்வி எழுப்பிய தன்னை சாதி பெயரை குறிப்பிட்டு பேசியதாகவும் புகாரில் குற்றம் சாட்டியிருந்தார். இந்த புகார்களின் அடிப்படையில், துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்டோருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் கருப்பூர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், எந்த பரிவர்த்தனையும் நடைபெறவில்லை, எந்த முறைகேடும் நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுக்களை நீதிபதி இளந்திரையன் விசாரித்தார். காவல் துறை தரப்பில் வழக்கை ரத்து செய்ய கூடாது என வாதிட்டார். இதையடுத்து, துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்டோர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்து, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Also Read
-
முதலீடுகள் குறித்த திமுக மீதான விமர்சனம்.. - பொய்யை உடைத்து கீர்த்தனாவுக்கு TRB ராஜா கொடுத்த பதிலடி என்ன?
-
“முதலமைச்சர் கேட்கிறார்... சபாநாயகரும் ‘ஆ... Action’ என்கிறார்!” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
-
“ரீல்ஸ் ரெடி.. சட்டமன்றத்தை ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிவிட்டார் முதல்வர்” : உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேட்டி!
-
“குட்டிக்கதையா.. கணவனை தேடும் மனைவி கதை தமிழ்நாட்டுக்கே தெரியும்!” - உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!
-
”தொடருவாரா ஸ்டீபன் ஃப்ளெமிங்.. முடிவெடுத்த CSK.. தோனி சொன்னது இதுதான்” - முழு விவரம் உள்ளே!