Tamilnadu

”போலி கைத்தறி உற்பத்தியை தடுத்திடுக” : நாடாளுமன்றத்தில் கணபதி ராஜ்குமார் MP வலியுறுத்தல்!

இந்தியாவில் உற்பத்தியாகும் அசல் கைத்தறி பொருட்களை பாதுகாப்பிற்காக ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கோவை மக்களைவை திமுக உறுப்பினர் கணபதி ராஜ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பல கைத்தறிப் பொருட்கள் இயந்திரத்தின் கீழ் நெய்யப்பட்டு நாட்டில் கையால் தயாரித்த பொருட்களாக விற்கப்படுகின்றன என்பதை குறிப்பிட்டு அதை தடுக்க வேண்டும் என்றும் போலி கைத்தறிப் பொருட்களை கண்டறியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கை வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

பெண்களுக்கு பிரசவத்திற்குப் பிந்தைய மனநலப்பிரச்சினைகள்

பெண்களிடையே பிரசவத்திற்குப் பிந்தைய மனநலப் பிரச்சினைகள் அதிகரித்திருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ள திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, அதற்காக ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுபோன்ற ஒரு பிரச்சினை பெண்களுக்கு ஏற்படுவது குறித்து ஒன்றிய அரசு பெண்கள் நலனில் அக்கறையுடன் ஏதேனும் கணக்கெடுப்பு நடத்தியுள்ளதா என்றும் பிரச்சினைகளை கண்டறிவதுடன் அவற்றுக்கான தீர்வை வழங்குவதில் துணை செவிலியர்களின் செயல்பாடுகள் எந்த அளவிற்கு உறுதுணையாக இருக்கின்றது எனவும் கேட்டுள்ளார்.

இப்பிரச்சினையில் தீவிரத்தை கருத்தில்கொண்டு உடனடியாக பெண்களின் பிரசவத்திற்குப் பிந்தைய மனநலத்தை மையமாகக் கருதும் திட்டங்களை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Also Read: மல்டி மாடல் லாஜிஸ்டிக் பூங்காக்களில் தமிழ்நாடு உள்ளதா? -திமுக MP கேள்விக்கு ஒன்றிய அமைச்சரின் பதில் என்ன?