Tamilnadu
“ஒரு மாதத்திற்குள் 7,900 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்படும்!” : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்!
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், 2025 - 26 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்புடன், கடந்த மார்ச் 14ஆம் நாள் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் கடந்த ஒரு வாரமாக தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் விடையளிக்கும் வகையில், வினா - விடை நேரம் நடைபெற்று வருகிறது.
அதன் பகுதியாக, சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு, விடையளிக்கும் போது பேசிய அமைச்சர் கீதா ஜீவன், “அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர், அங்கான்வாடி உதவியாளர் என மொத்தம் தமிழ்நாட்டில் 7,900 புதிய அங்கன்வாடி பணியாளர்களை நியமிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, சத்துணவுத் துறையில் 8,997 சத்துணவு சமையலர்களை நியமிப்பதற்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு மாதத்திற்குள் புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
மேலும், பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இத்துறைகளிலும் பணி உயர்வுகள் வழங்குவது நடைமுறையில் இருக்கிறது” என்றார்.
Also Read
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
-
மூளையை தின்னும் அமீபா வைரஸ் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்!