Tamilnadu
”மோடியின் தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தை தகர்த்தெறியும் தென் மாநிலங்கள்” : அமைச்சர் ரகுபதி பேட்டி!
”தொகுதி மறுசீரமைப்பை இந்தியாவில் யாரும் எதிர்க்க மாட்டார்கள் அசுர பலத்துடன் இருக்கிறோம் என்று நினைத்த ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு தென் மாநில முதலமைச்சர்கள் ஒருமித்த குரலில் பதிலடி கொடுத்து இருக்கிறார்கள். ஒன்றிய அரசுக்கு முட்டுக்கட்டை கொடுக்கின்ற சந்திரபாபு நாயுடு கூட தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்” என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, ”மனிதனுக்கு நாக்கு என்று ஒன்று இருக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி 2 மாதத்திற்கு முன்பு அ.தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் கூட்டணி இல்லை என்று சொன்னார். தற்போது தி.மு.க மட்டும் தான் எதிரி என்று கூறுகிறார். நல்லதுதான். எடப்பாடி பழனிசாமி எத்தனை பேரை சேர்த்துக் கொண்டு வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்கள் கூட்டணி உறுதியோடு இருக்கிறது. 2026 தேர்தலில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்.
வட மாநிலங்களில் எந்தெந்த மாநிலங்களில் முன்மொழி கொள்கை உள்ளது. பல மொழிகள் அழித்து இந்தி எப்படி உருவானது என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்தி இருக்கிறார். இந்தி பேசும் இந்தியா முழுவதும் கிடையாது. தொகுதி மறுசீரமைப்பை இந்தியாவில் யாரும் எதிர்க்க மாட்டார்கள் அசுர பலத்துடன் இருக்கிறோம் என்று நினைத்த ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு தென் மாநில முதலமைச்சர்கள் ஒருமித்த குரலில் பதிலடி கொடுத்து இருக்கிறார்கள். ஒன்றிய அரசுக்கு முட்டுக்கட்டை கொடுக்கின்ற சந்திரபாபு நாயுடு கூட தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.தொகுதி மறுசீரமப்பை எதிர்ப்து போல் மும்மொழிக் கொள்கையையும் தென் மாநிலங்கள் எதிர்க்கிறது.
தொகுதி மறுசீரமைப்பு கொண்டு வருவது ஒன்றிய பா.ஜ.க அரசுதான். அதனால்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டயி அனைத்து கட்சி கூட்டத்தில் பா.ஜ.க பங்கேற்கவில்லை. 10 மாநிலங்களை வைத்துக் கொண்டு ஆட்சிக்கு வர முடியும் என்று பா.ஜ.க பகல் கனவு கண்டு வருகிறது.” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!
-
திருவாரூரில் ரூ.846.47 கோடியில் 1,234 முடிவுற்ற பணிகள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
ரூ.11 கோடி செலவில் வணிக வளாகம் : திருவாரூர் மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்!
-
திருவாரூரில் உள்ள ‘சமூகநீதி விடுதி’க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு!
-
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் இந்தி திணிப்பு முயற்சி : ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!