Tamilnadu
அ.தி.மு.கவை நாங்கள் எதிரியாக பார்க்கவில்லை உதிரியாக பார்க்கிறோம் : அமைச்சர் சேகர்பாபு கடும் தாக்கு!
சென்னை கொளத்தூர், பேப்பர் மில்ஸ் சாலையில் CMDA சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய வட்டாட்சியர் அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், 'மக்கள் சேவை மையம்' ஆகியவற்றை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,” வட சென்னை மக்களின் கனவுகளை திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. சில சமூக விரோதிகளால் இந்த இடம் ஆக்கிரமிப்பு உள்ளாக இருந்ததை தடுத்து இந்த இடத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அழிந்து கொண்டிருக்கும் கட்சிதான் அதிமுக. எடப்பாடி பழனிசாமி அதிமுகவை முழுமையாக அழித்துவிட்டார். அதிமுகவை நாங்கள் எதிரியாக பார்க்கவில்லை. உதிரியாகத்தான் பார்க்கிறோம்.
அதிமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையேற்ற பிறகு தமிழக மக்கள் அவருக்கு தோல்வி என்ற தொடர் பரிசை கொடுத்து வருகிறார்கள். அதேநேரம் நின்ற தேர்தலில் எல்லாம் வெற்றையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் கொடுத்து வருகிறார்கள்.
2026 ஆம் ஆண்டு நிச்சயம் 200 தொகுதிக்கு மேல் தி.மு.க வெற்றி பெறும். மதச்சார்பற்ற கூட்டணி வெல்லும். இதை நாளைய வரலாறு சொல்லும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஜனநாயகத்தின் குரல்வளையை தன் பூட்ஸ் காலால் நெறிக்கும் த.வெ.க அரசு : தி.மு.க ஆவேசம்!
-
த.வெ.க எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள் : கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - சரமாரி கேள்வி!
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!