Tamilnadu
பாலியல் புகார் வழக்கு : சீமானை கைது செய்ய காவல்துறை முடிவு!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. சீமானுக்கு எதிராக விஜயலட்சுமி அளித்த புகாரை ரத்து செய்ய முடியாது என்று திட்டவட்டமாக நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், சீமான் வற்புறுத்தலினால் ஆறு, ஏழு முறை விஜயலட்சுமி கருக்கலைப்பு செய்துள்ளதும், விஜயலட்சுமியிடமிருந்து பெருந்தொகையை சீமான் பெற்றுள்ளதாகதாகவும் விஜயலட்சுமி புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
அதோடு, திருமணம் செய்து கொள்வதாக கூறி நடிகை விஜயலட்சுமி உடன் சீமான் உறவு வைத்துள்ளார் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று வளசரவாக்கம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சீமானுக்கு காவல்துறையினர் அழைப்பானை அளித்திருந்தனர். ஆனால் இன்று சீமான் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதனைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வளசரவாக்கம் காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!
-
ரூ.43.20 கோடியில் அறநிலையத்துறை கட்டடங்கள் திறப்பு - 83 பேருக்கு பணி நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!
-
கரூர் விவகாரம் “நாங்க வழக்குப் போடல” - நீதிமன்றத்தை ஏமாற்றிய தவெக: பாதிக்கப்பட்டவர்கள் புகாரால் ட்விஸ்ட்