Tamilnadu

”தமிழ்நாட்டிற்கான கல்வி உதவித்தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்" : கனிமொழி MP பேச்சு!

மக்களவை நேரமில்லா நேரத்தில் இன்றுதமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள சமக்ர சிக்‌ஷா அபியான் நிதியை உடனடியாக விடுவிக்குமாறு திமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்.பி ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்புவரை பயிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உதவித் தொகைகளுக்கான வருமான உச்சவரம்பை EWS மாணவர்களை போலவே எட்டு லட்சமாக உயர்த்தவதன் மூலம் விளிம்புநிலை சமூக மக்கள் அதிக அளவில் கல்வி பயில இயலும் என்பதால் ஒன்றிய அரசு அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்பதை விவாதிக்க அவையில் ஒத்திவைப்பு தீர்மானத்தை கனிமொழி எம்.பி அவர்கள் முன்மொழிந்தார்.

அதேபோல் மாநிலங்களவையில்,ஆர். கிரிராஜன் MP முத்ரா கடன் திட்டத்தின் (PMMY) வரம்பை அரசாங்கம் 20 லட்சமாக உயர்த்திய பிறகு தமிழ்நாட்டில் சிறு மற்றும் குறு தொழில்களுக்கான மூலதன நிதி எளிதாக கிடைக்கப் பெறுவதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும்,தமிழ்நாட்டில் முத்ரா கடந்திட்டத்தின்கீழ் பயனடைந்த நபர்களின் எண்ணிக்கை, 2022, 2023, 2023-24 மற்றும் 2024-25ஆம் ஆண்டுகளில் ஷிஷு, கிஷோர், தருண் மற்றும் தருண் பிளஸ் பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்ட தொகைகளின் விவரங்கள், முத்ரா கடன் திட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் தொழில்முனைவோரை திறம்பட சென்றடைவதை உறுதி செய்ய அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் கடன் பாதுகாப்பை மேம்படுத்த மைக்ரோ யூனிட்களுக்கான கடன் உத்தரவாத நிதி (CGFMU) எவ்வாறு பங்களித்துள்ளது போன்ற விவரங்களை வெளியிடுமாறு கேட்டுள்ளார்.

Also Read: ”இருநாட்டு மீனவர்களுமே இப்பிரச்சனையை தீர்த்துக் கொள்ளட்டும்”: மக்களவையில் TR பாலு MP அறிவுறுத்தியது என்ன?