Tamilnadu
”அடாவடி செய்து வரும் ஆளுநர்கள்” : The Hindu ஆங்கில நாளிதழ் குற்றச்சாட்டு!
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசும், அவர்களின் முகவர்களான மாநில ஆளுநர்களும் நாள்தோறும் பல்வேறு தொல்லைகளை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக ஆளுநர்கள் தங்கள் வரம்புக்கு மீறி செயல்பட்டு அராஜகமாக நடந்து கொள்கின்றனர். அதன் ஒருபகுதியாக பல்கலைக்கழக வேந்தர் என்ற பொறுப்பை வைத்து கொண்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், பல்கலைக்கழகங்கள் விவகாரத்தில் ஆளுநர்களின் தலையீடுகள் குறித்து தி இந்து ஆங்கில நாளிதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பல்கலைக்கழகங்களுக்கான வேந்தர் பொறுப்பு நல்லெண்ண அடிப்படையில் ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது இந்த பொறுப்பு அரசியலுக்கு பயன்படுத்தப்படுகிறது என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மாநில அரசு மற்றும் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர் ஆளுநர் என்றும், எனவே மாநில அரசு மற்றும் அமைச்சரவையின் முடிவுகளுக்கும், பரிந்துரைக்கும் கோப்புகள் மற்றும் சட்டமோசதாக்களுக்கு கையொப்பமிட்டு ஒப்புதல் அளிக்க வேண்டியது அவரது கடமை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஆளுநரோ தங்களை நியமித்த ஒன்றிய அரசுக்கு நன்றி கடன் செலுத்தும் வண்ணம், அவர்களின் அரசியல் எதிரிகளை பழிவாங்கி கொண்டிருக்கின்றனர். அதுவும், பல்கலைக்கழங்களை முக்கிய கருவியாக பயன்படுத்துகின்றனர். அரசு பரிந்துரைக்கும் துணைவேந்தர்களையும், பல்கலைக்கழக உறுப்பினர்களையும் சிண்டிகேட் உறுப்பினர்களையும் நியமிக்காமல் ஆளுநர்கள் அடாவடி செய்து வருகின்றனர். ஆளுநர்களின் செயல்களால் பல்கலைக்கழகங்களின் சுயாட்சி மற்றும் நிர்வாகம் சீர்குலைந்து போயுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலும், அதன் சொந்த நிதியிலும் இயங்கும் பல்கலைக்கழங்களுக்கு ஆளுநர்கள் முதலில் தலைமை தாங்கலாமா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இனியாவது, அரசியல் எண்ணத்துடன் பல்கலைக்கழகங்களை பயன்படுத்துவதை நிறுத்தி கொண்டு, மாணவ, மாணவிகளின் கல்வி கனவை நனவாக்கவும், உரிய காலத்தில் அவர்களுக்கு பட்டங்கள் வழங்கிடவும், பல்கலைக்கழகங்களின் நிர்வாகங்கள் சீராக செயல்படவும், பல்வேறு சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளவும் மாநில அரசுக்கு ஆளுநர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தி இந்து ஆங்கில நாளிதழ் தனது கட்டுரையில் வலியுறுத்தியுள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் விவரம் என்ன?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!
-
"மோடியின் அமைச்சரவையில் 39 % பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள்" : அமித்ஷாவுக்கு ஆ.ராசா MP பதிலடி !
-
நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்காக... இழப்பீடு தொகையை அதிகரித்த தமிழ்நாடு அரசு : முழு விவரம் உள்ளே !
-
ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 66 புதிய பள்ளிக் கட்டடங்கள் - 818 பேருக்கு பணி நியமனம் : முழு விவரம் உள்ளே!
-
மக்கள் நல்வாழ்வுத் துறையில் 644 பேருக்கு பணி நியமனம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!