Tamilnadu

கூட்டுவுறவுத்துறையின் கீழ், ரேஷன் கடைகளுக்கு முன் பண மானியமாக ரூ.300 கோடி - தமிழ்நாடு அரசு உத்தரவு!

கூட்டுவுறவுத்துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள், 33,000 ரேஷன் கடைகளை நடத்துகின்றன. இந்த கடைகளை நடத்துவதால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்வதற்கு 300 கோடி ரூபாய் முன் பண மானியமாக அனுமதிக்க வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

இதை பரிசீலனை செய்த அரசு, முன் பண மானியமாக ரூ.300 வழங்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இதன்படி, 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான முன் பண மானியமாக ரூ.300 கோடியை விடுவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த தொகை தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மூலம் மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டு, அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: சிவகங்கை, ஒக்கூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!