Tamilnadu
சிவகங்கை மாவட்டத்திற்கு 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் : அதன் விவரம் இங்கே!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு வருகை தந்தார். அப்போது பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சிவகங்கை வட்டம், ஒக்கூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு நேரில் சென்று, அங்கு தங்கியுள்ள இலங்கை தமிழர்களிடம் அவர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், அவர்களது தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர்,சிவகங்கையில் நடைபெற்ற அரசு விழாவில், 51 கோடியே 37 இலட்சத்து 6 ஆயிரம் ரூபாய் செலவில் 46 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 164 கோடியே 1 இலட்சத்து 63 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 33 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 53,039 பயனாளிகளுக்கு 161 கோடியே 11 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் சிவகங்கை மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
முதல் அறிவிப்பு:-
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக இருக்கும் கட்டடம் கட்டப்பட்டு 40 ஆண்டுகள் ஆகி, அது பழுதடைந்து, இடப்பற்றாக்குறை சூழ்நிலையில் இருக்கிறது என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். அதனால், பல துறைகளின் அலுவலகங்கள் வாடகைக் கட்டடங்களில் இயங்கிக்கொண்டு இருப்பதாலும், எல்லா மாவட்ட அலுவலகங்களும் ஒரே இடத்தில் சிறப்பாக செயல்படும் வகையில் 89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கூடுதல் கட்டடம் கட்டப்படும்!
இரண்டாவது அறிவிப்பு:-
சிங்கம்புணரி, திண்டுக்கல் மற்றும் காரைக்குடி நகரங்களுக்குச் செல்லும் வாகனங்கள் - திருப்பத்தூர் நகரப் பகுதிக்குள் வராமல் செல்லும் வகையில், திருப்பத்தூர் நகரத்திற்கு 50 கோடி ரூபாய் செலவில் புதிய புறவழிச்சாலை அமைக்கப்படும்.
மூன்றாவது அறிவிப்பு:-
கடந்த ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, விரிவாக்கப்பட்ட காரைக்குடி மாநகராட்சிக்கு புதிய மாநகராட்சி அலுவலகம் அமைக்க 30 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.
Also Read
-
"தூய்மை தொழிலாளர்களின் பணி நிரந்தரம் கோரிக்கை ஆதிக்க மனநிலையின் வெளிப்பாடு" - ஆதித்தமிழர் பேரவை !
-
முகவரி இல்லாதவர்களை வாக்காளர்களாக சேர்த்தது ஏன்? - தேர்தல் ஆணையர் விளக்கம் !
-
"அன்புமணி சோற்றுக்குள் பூசணிக்காயையே மறைத்திருக்கிறார்" - அமைச்சர் MRK பன்னீர்செல்வம் விமர்சனம் !
-
நாட்டிற்கே முன்னோடியான திட்டம்.. இணைய வழியில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன்.. தொடங்கி வைத்தார் முதல்வர்
-
தருமபுரியில் நலனுக்காக... ரூ.1705 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகள்... திறந்து வைத்த முதலமைச்சர்!