Tamilnadu
இனி மாநகர பேருந்துகளிலும் சிங்காரச் சென்னை ஸ்மார்ட் அட்டையை பயன்படுத்தலாம் - நாளை திட்டம் தொடக்கம் !
சென்னையில் ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு செல்ல பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் உள்ளிட்ட மூன்று போக்குவரத்து வசதிகள் உள்ளன. ஆனால் இது மூன்றிற்கும் மக்கள் தனி தனியாக டிக்கெட் எடுத்து வருகிறார்கள். மக்கள் தனித்தனியாக பயணச்சீட்டு பயன்படுத்தும் நிலையில் இவை அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தும் முறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, ஒரே டிக்கெட்டை பயன்படுத்தி இந்த மூன்றிலும் பயணிக்க முடியும். இதற்காக ஒரு card அல்லது பாஸ் போன்ற அட்டை வழங்கப்படும்.இந்த கார்டை மெட்ரோ நிலையத்தில் ஸ்கேன் செய்து அதில் பயணிக்க முடியும். மின்சார ரயில்களில் இந்த கார்டை ஸ்கேன் செய்து கொள்ள முடியும்.
பேருந்துகளிலும் நடத்துனர்களிடம் ஸ்கேன் செய்யும் கருவிகள் வழங்கப்படும். எனவே இந்த ஒரு கார்டை ரீ சார்ஜ் செய்து அதன் மூலம் மூன்று சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ள முடியும். எந்த சேவையை பயன்படுத்த வசதியாக இருக்கிறதோ மக்கள் அதை பயன்படுத்த முடியும். இதனால் அவர்கள் கவுன்ட்டர்களின் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.
இந்த திட்டத்துக்கான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த திட்டம் நாளை தொடங்கப்படவுள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திட்டத்தை நாளை பல்லவனிடம் பணிமனையில் துவக்கி வைக்கிறார். முதற்கட்டமாக, மெட்ரோ ரயில்களில் மட்டுமே இருந்து வந்த இந்த சிங்காரச் சென்னை பயண அட்டை , இனி மாநகர பேருந்துகளிலும் பயன்படுத்த முடியும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது . மேலும் மின்சார ரயில்கள் , விரைவு ரயில்கள் சாப்பிட மற்ற போக்குவரத்திற்கும் பயன்படுத்தும் வகையில் திட்டத்தை விரிவாக்கம் செய்ய சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
Also Read
-
Digital Store Value Pass... சென்னை மெட்ரோ ரயிலில் எளிதாக பயணிக்க இதை பயன்படுத்தலாம் : விவரம் உள்ளே !
-
வர்த்தக ஒப்பந்தங்களில் இந்தியாவை பழிவாங்குகிறதா அமெரிக்கா ? - நாடாளுமன்றத்தில் திமுக MP ஆ.ராசா கேள்வி !
-
பஹல்காம் தாக்குதல் ஒன்றிய பாஜக அரசின் நிர்வாக தோல்வி - நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. ராசா குற்றச்சாட்டு!
-
“மோடியிடம் தைரியம் இல்லை... பாகிஸ்தானிடம் சரணடைந்து விட்டாரா?” : ராகுல் காந்தி கடும் தாக்கு!
-
“அமித்ஷாவின் பஹல்காம் கேலிக்கூத்து... மோடி எங்கே இருக்கிறார் ?” : மக்களவையில் ஆவேசமான திருச்சி சிவா MP !