Tamilnadu
பொங்கல் பண்டிகை : தமிழ்நாட்டு மக்களுக்கு கூடுதல் விடுமுறை - முதலமைச்சர் அசத்தல் அறிவிப்பு!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 17.01.2025 அன்று விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு !
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இவ்வாண்டு தமிழ்நாட்டில் 14.01.2025 செவ்வாய்கிழமை அன்று தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதாலும், 15.01.2025, 16.01.2025, 18.01.2025 மற்றும் 19.01.2025 ஆகியவை அரசு விடுமுறை நாட்கள் என்பதாலும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில், அதற்கு இடைப்பட்ட நாளான 17.01.2025 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பலதரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.
அக்கோரிக்கைகளை ஏற்று, முதலமைச்சர், மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், 17.01.2025 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும், அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், 25.01.2025 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும் உத்தரவிட்டுள்ளார்.” எனத் தெரிவித்துள்ளது.
Also Read
-
“சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்கள், இதுவரை சுமார் ரூ.690 கோடிக்கு விற்பனை!” : துணை முதலமைச்சர்!
-
“பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திராவிட மாடல் அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!
-
ரூ.25.72 கோடி செலவில் ‘பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“Computer Expert பழனிசாமியின் கனவு பலிக்காது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை!
-
#VBGRAMG - மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம் : எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!