Tamilnadu

"இந்தியாவிலேயே 50 லட்சம் இளைஞர்களைக் கொண்ட இயக்கம் திமுக மட்டும்தான்" - அமைச்சர் தா.மோ.அன்பரசன் !

காஞ்சி வடக்கு மாவட்டம், குன்றத்தூர் தெற்கு ஒன்றிய திமுக மற்றும் சென்னகுப்பம் ஊராட்சி, திமுக சார்பில், துணை முதலமைச்சர், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாபெரும் எளியோர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் ஒரகடம் பகுதியில் நடைபெற்றது.

இந்த கூத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று ஏழை எளியோருக்கு நலத்திட்டங்கள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், "இந்தியாவிலேயே 50 லட்சம் இளைஞர்களைக் கொண்ட இயக்கம் திமுக மட்டும் தான், அந்தக் கட்டமைப்பை உருவாக்கியவர் இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

234 தொகுதிகளிலும் பாசறை கூட்டங்கள் நடத்தி இளைஞர்களுக்கு கட்சியின் கொள்கைகளை கற்றுத் தந்தவர். மாவட்ட வாரியாக கட்சியின் கொள்கைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல 182 இளம் பேச்சாளர்களை என் உயிரினும் மேலான நிகழ்ச்சி மூலம் தேர்ந்தெடுத்து கழகத்திற்கு வலு சேர்த்துள்ளார்.

ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுகவை போல அல்லாமல், முத்தமிழறிஞர் கலைஞர் தங்கமான தலைவரை திமுக கழகத்திற்கு, நமக்கு விட்டுச் சென்றது போல, நமது கழகத் தலைவர் இளம் தலைவரை கழகத்திற்கு தேர்ந்தெடுத்து கொடுத்துள்ளார்.எனவே இன்னும் 50 ஆண்டுகளுக்கு திமுகவை யாரும் அசைத்துக் கூட பார்க்க முடியாது.

வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதியில் 200 தொகுதிகளில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். திராவிட மாடல் ஆட்சி என்றால் எதிரிகளுக்கு எரிகிறது. ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் மக்களோடு இருக்கும் இயக்கம் திமுக மட்டும் தான்.மற்றவர்கள் தேர்தல் நேரத்தில் வந்து விட்டு காணாமல் போய்விடுவார்கள்,

Also Read: ”நாடு எங்கே செல்கிறது? கோட்சேவை தியாகி என பாஜக MP நாடாளுமன்றத்திலேயே சொல்கிறார்” - அப்பாவு வேதனை !