Tamilnadu
“தமிழ்நாடு பள்ளிகளில் AI வகுப்புகள்!” : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பான சிஐஐ நடத்தும் பள்ளிகல்வி தொடர்பான கருத்தரங்கு நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர்...
“செயற்கை நுண்ணறிவு (AI) வருங்காலத்தில் பள்ளிக் கல்வித் துறையில் பெரும் பங்காற்றப் போகிறது, அதன் காரணமாக தான் பள்ளிகளில் AI வகுப்புகள் நடத்த நாட்டில் முதல் மாநிலமாக தமிழ்நாடு, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது.
18 ஆம் நூற்றாண்டு மற்றும் 19ஆம் நூற்றாண்டு வாக்கில் தான் உலகில் பலருக்கு கல்வி என்றால் என்னவென்று தெரிய ஆரம்பித்தது. 1950ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் இந்தியாவில் கல்வி என்றால் என்னவென்று பொதுமக்களுக்கு தெரிய ஆரம்பித்தது.
மனப்பாடம் செய்து தேர்வை எழுதுவது அறிவு கிடையாது, மெக்காலே என்ற ஒரு மனிதர் வராமல் இருந்து இருந்தால் எல்லா இடங்களிலும் வேத பாட சாலைகளும், சம்ஸ்கிருதம் மட்டுமே போதிக்கப்பட்டு இருக்கும். தற்போது, பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.
இந்த கருத்தரங்கில் கலந்துரையாடும் கருத்துகளை அறிக்கையாக கொடுத்தால் அதில் எதை துறையால் நிறைவேற்ற முடியுமோ அவற்றை துறையின் அமைச்சர் ஆக நான் செய்வேன்.
பள்ளி முடித்தவுடன் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற மனநிலையை பெற்றோர்கள் மாற்றி கொள்ள வேண்டும் அதற்கான விழிப்புணர்வை துறை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
எல்லாருக்கும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல், அதனால் குறைந்த சம்பளம் என்றாலும் வேலையில் சேர்ந்து அனுபவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள், திறமையை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
நான் எம்.சி.ஏ முடித்த பின்னர் 2 ஆண்டுகள் வேலைத்தேடினேன், நடந்தும், இரு சக்கர வாகனத்திலும் பயணித்து வேலைத்தேடி கிடைத்த முதல் மாத சம்பளம் 8,000 ரூபாயை முதலமைச்சரிடம் தான் வழங்கினேன்” என்றார்.
Also Read
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?
-
அதானிக்கு தாரை வார்க்கப்பட்ட புதுச்சேரி மின்துறை - இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு !
-
செப்.1 முதல் ‘நெல் கொள்முதல் விலை’ அதிகரிப்பு! : விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு உத்தரவு!
-
"உலக மயமாகிக் கொண்டுள்ளார் தந்தை பெரியார்" - ஆசிரியர் கி.வீரமணி நெகிழ்ச்சி !