Tamilnadu
சென்னை கடற்கரை - தாம்பரம்.. ரத்து செய்யப்பட்ட இரயில்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம் -போக்குவரத்து கழகம்!
சென்னை கடற்கரை - தாம்பரம் வரை செல்லும் இரயில்கள் நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு காரணமாக, அந்த இரயில்கள் பல்லாவரம் மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பு வருமாறு :
தாம்பரம் ரயில் நிலையத்தில் 17.11.2024 அன்று காலை 07.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 07.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் செல்லும் இரயில்கள் பல்லாவரம் இரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
எனவே, நாளை அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக
தாம்பரத்திலிருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு 10 பேருந்துகள்,
தி.நகர் பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் மற்றும்
பிராட்வே பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள்
- என மொத்தம் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
Also Read
-
87 புதிய ‘108’ அவசரகால ஊர்திகளின் சேவை தொடக்கம்! - முழு விவரம் உள்ளே!
-
கிண்டியில் 118 ஏக்கர் பரப்பில் மாபெரும் சுற்றுச்சூழல் பூங்கா! : மும்முரமாக நடைபெறும் பணிகள்!
-
“இளைஞர்களின் கைகளுக்கு இந்த ஆவணத்தைக் கொண்டு சேர்ப்பீர்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
தமிழ்நாடு முழுவதும் 16,248 சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 6,78,034 பேர் பயன்!” : அமைச்சர் மா.சு தகவல்!
-
“ஆணவத்தால், திமிரால், அளவுக்கு மீறிய தான்தோன்றித் தனத்தால் தோற்றவர் பழனிசாமி” : முரசொலி கடும் விமர்சனம்!