Tamilnadu
வேளச்சேரி மழை வெள்ளத்துக்கு முற்றுப்புள்ளி : பயன்பாட்டுக்கு வந்த கிண்டி ரேஸ் கிளப் மைதான புதிய குளங்கள் !
கிண்டியில் 160 ஏக்கரில் அமைந்துள்ள ரேஸ் கிளப் மைதானம் ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. இந்த நடைமுறை சுதந்திரத்துக்கு பின்னரும் தொடர்ந்த நிலையில், ரேஸ் கிளப் நிர்வாகம் அரசுக்கு முறையாக வாடகை பாக்கி செலுத்தாமல் இருந்து வந்தது.
இதன் காரணமாக ரேஸ் கிளப் மைதானத்தை தமிழ்நாடு அரசு சமீபத்தில் கையப்படப்படுத்தியது. அதனைத் வேளச்சேரியில் ஏற்படும் வெள்ளப்பாதிப்பை தடுக்க கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் நீா்நிலையுடன் கூடிய பசுமை பூங்கா அமைக்கலாம் என பசுமை தீா்ப்பாயம் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைத்தது.
அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி சாா்பில் மீட்கப்பட்ட நிலத்தில் 4.24 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட 4 குளங்கள் வெட்டும் பணி கடந்த மாதம் தொடங்கியது. இந்த நிலையில், இதில் இரண்டு குளங்கள் முழுவதும் வெட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மீதமுள்ள 2 குளங்கள் வெட்டும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவமழைக்கு முன்பாக அந்த பணிகளும் முடிக்கப்படும் என்றும், இதனால் மைதானத்தில் தேங்கும் மழைநீா் வெளியேற்றப்படாமல் குளங்களில் தேக்கி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 3 குளங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Also Read
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!
-
திருவாரூரில் ரூ.846.47 கோடியில் 1,234 முடிவுற்ற பணிகள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
ரூ.11 கோடி செலவில் வணிக வளாகம் : திருவாரூர் மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்!