Tamilnadu
பா.ஜ.க நிர்வாகி வீட்டில் CBCID போலிஸார் திடீர் சோதனை : சிக்கிய முக்கிய ஆவணங்கள்?
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கே.ஆர்.வெங்கடேசன். இவர் பா.ஜ.க OBC அணியின் மாநில செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் ஆவடி மாநகர காவல் துறையின் மத்திய குற்ற பிரிவு போலீசார் கே.ஆர்.வெங்கடேசன் வீட்டில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
2023 ஆம் ஆண்டு மற்றும் நடப்பு ஆண்டில் நில மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல்வேறு இடங்களில் நடைபெறும் சோதனையின் ஒரு பகுதியாக பா.ஜ.க நிர்வாகி வீட்டிலும் சோதனை நடத்தி உள்ளனர்.
பல்வேறு ஆவணங்களை அப்போது மத்திய குற்ற பிரிவு போலீசார் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்தாண்டு வழக்கு ஒன்றில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த பா.ஜ.க நிர்வாகி வீட்டில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போதும் பணப்பட்டுவாடா ஏதேனும் நடைபெற்றதா? என்பதற்காக சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !