Tamilnadu
ஸ்வீட் எடு.. கொண்டாடு... தீபாவளியை முன்னிட்டு Combo Offer அறிவித்த ஆவின் !
ஆண்டுதோறும் அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் மாத துவக்கத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பண்டிகையை முன்னிட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து மகிழ்வர். அதே போல் அனைவரது வீடுகளிலும் பலகாரங்கள் செய்து உற்றார் உறவினர் என பலருக்கும் வழங்கப்படும்.
மேலும் அனைவரது வீடுகளிலும் இனிப்புகள் வாங்கி உண்பர். இந்த பண்டிகையை முன்னிட்டு ஆவினிலும் ஆண்டுதோறும் சிறப்பு சலுகை வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் 3 combo offer-களை அறிவித்துள்ளது ஆவின்.
அவை வருமாறு :
* மைசூர்பாக் (250 கி), மிக்சர் (200 கி), 2 ஆவின் குக்கீஸ் (80 கி), 1 சாக்லேட் (14 கி) உள்ளிட்டவை அடங்கிய காம்போ ரூ.300-க்கும்,
* பாதாம் மிக்ஸ் (200 கி), நெய் பாதுஷா (250 கி), மிக்சர் (200 கி), குலாப் ஜாமூன் (250 கி), 1 சாக்லேட் (25 கி) உள்ளிட்டவை அடங்கிய காம்போ ரூ.500-க்கும்,
* முந்திரி அல்வா (250 கி), காஜூ கட்லி (250 கி), காஜூ பிஸ்தா ரோல் (250 கி), நெய் பாதுஷா (250 கி) உள்ளிட்டவை அடங்கிய காம்போ ரூ.900-க்கும்
- விற்பனை செய்யப்படுகிறது. வரும் அக்.31-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், இந்த சிறப்பு சலுகை இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு துவங்குகிறது.
Also Read
-
போதை பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ : தவெக அமைச்சருக்கு எதிராக களமிறங்கும் திமுக மாணவர் அணி !
-
கடலூர் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி... ஒரே வாரத்தில் 2 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு!
-
தமிழ் திரையுலகத்தில் நீங்கா துயரம்... பல தலைமுறைகளுக்கான சினிமா பல்கலைக்கழகம் கே.பாக்யராஜ் !
-
தமிழ்த்திரையுலகம் உள்ளவரை பாக்யராஜ் சாரின் புகழ் நிலைத்திருக்கும் : உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!
-
“ஒளிந்திருந்த பூனை வெளியே வந்துவிட்டது” : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்புக்கு அன்பில் மகேஷ் கண்டனம்!