Tamilnadu
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு UNIATF Award : திராவிட மாடல் திட்டத்திற்கு கிடைத்த உலக அங்கீகாரம்!
2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் ’மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது.
தொலைதூரக் கிராம மக்கள் மருத்துவர்களைத் தேடி வரவேண்டியதில்லை; அந்த மக்களைத் தேடி மருத்துவர்கள் சென்று மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் "மக்களைத் தேடி மருத்துவம்" என்னும் மகத்தான திட்டம் உருவாக்கப்பட்டது.
இந்த திட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளில் இத்திட்டத்தின் வாயிலாக 632 கோடியே 80 இலட்சம் ரூபாய்ச் செலவில் 1 கோடியே 85 இலட்சம் பேர் பயனடைந்துள்ளார்கள்.
இந்நிலையில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு United Nation Interagency Task Force Award கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியத் துணைக் கண்டத்துக்கே முன்னோடித் திட்டம் மக்களைத் தேடி மருத்துவ திட்டம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”இந்தியத் துணைக் கண்டத்துக்கே முன்னோடித் திட்டமாக நமது திராவிட மாடல் அரசில் செயல்படுத்தப்பட்டுள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் தேடி வந்திருக்கிறது.
ஒரு கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இதுவரையில், இந்தத் திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர்.
ஒவ்வொருவரது இல்லத்துக்கும் சென்று மருத்துவச் சேவைகளை வழங்கும் நமது திட்டம், சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தின் அடையாளம்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2024-ஆம் ஆண்டிற்கான United Nation Interagency Task Force Award!
சிறப்பான முறையில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி - கண்காணித்து - மேம்படுத்தி வரும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கும், அவருக்குத் துணை நிற்கும் துறைச் செயலாளர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத் துறைப் பணியாளர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
இந்தத் திட்டம் இன்னும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு மக்களுக்குப் பயனளிப்பதைத் தொடர்ந்து உறுதிசெய்வோம்." என தெரிவித்துள்ளார்.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!