Tamilnadu
கிணற்றில் விழுந்த மான் : துணிச்சலுடன் மீட்ட 9 ஆம் வகுப்பு பள்ளி மாணவன்!
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் அரியவகை புள்ளி மான்கள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, மானை பார்த்த தெருநாய்கள் விரட்டியுள்ளது.
இதனால் மான்கள் அங்கிருந்து ஓடியது. அப்போது ஒரு மான் மட்டும் அருகே இருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
அதைப் பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவன் பொன் ஆன்ட்ரூஸ் கிணற்றில் குதித்து கயிறுமூலம் மானை மீட்க முயற்சி செய்துள்ளார். ஆனால் மாணவனால் தனியாக மானை மீட்க முடியவில்லை.
பிறகு மாணவனுடன் சேர்ந்து இளைஞர் ஒருவரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மானை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு வலை மூலமாக மீட்டனர்.
துணிச்சலுடன் தீயணைப்புத்துறையுடன் சேர்ந்து மானை மீட்ட மாணவன் பொன் ஆன்ட்ரூஸ்க்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Also Read
-
“தமிழ் மீனவர்களை கைவிடும் ஒன்றிய அரசு!” : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் கண்டனம்!
-
திருவண்ணாமலையில் 33 ஏக்கர் பரப்பளவில் ‘மு.க.ஸ்டாலின் பூங்கா’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
”திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்ற பார்க்கிறது பா.ஜ.க” : கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!
-
“தமிழ்நாடுதான் Electronics துறையின் Capital” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மதுரை மீது பா.ஜ.க.வுக்கு ஏன் இத்தனை வன்மம்? : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சரமாரி கேள்வி!