Tamilnadu
வன்முறையை ஏற்படுத்த முயலும் எச்.ராஜா : கைது செய்ய கோரி காவல் நிலையத்தில் காங்கிரஸ் புகார்!
தமிழ்நாடு பா.ஜ.க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச். ராஜாவை கைது செய்ய கோரி அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில்,”மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பா.ஜ.க தலைவர்கள் அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். தமிழ்நாட்டு பா.ஜ.க ஒருங்கிணைப்புக்குழு தலைவராக இருக்கும் எச்.ராஜா, ராகுல் காந்தி அவர்களை ஆன்டி இண்டியன் என்றும் தேச துரோகி என்றும் பேசியுள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை எதிர்க்கட்சி தலைவரை வெறுப்பு அரசியலை கொண்டு அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறார். மேலும் வன்முறையை தூண்ட பார்க்கிறார். எனவே எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளர் கோபிநாத் பழனியப்பன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவிடம் நேரில் புகார் மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?