Tamilnadu
தமிழ்நாடு முழுக்க 2,763 தேர்வு மையங்களில், நாளை TNPSC குரூப் 2 மற்றும் 2a தேர்வு!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 2 மற்றும் குரூப் 2a பதவிகளுக்கான முதல் நிலைத்தேர்வு நாளை (செப்டம்பர் 14) நடைபெறவுள்ளது.
இத்தேர்வினை சுமார் 7,93,947 தகுதிபெற்றவர்கள், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களின் 2,763 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர்.
சென்னையில் மட்டும் 251 தேர்வு மையங்களின் 3,759 தேர்வு அறைகளில் போட்டித்தேர்வு நடைபெறுகிறது. மொத்த தேர்வர்களில் 75,185 பேர் சென்னையில் தேர்வெழுதுவது குறிப்பிடத்தக்கது.
தேர்வர்கள் 8.30 மணிக்குள் தேர்வு அறைக்கு வர வேண்டும். சலுகை நேரம் 9 மணி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்தில் நுழைய அனுமதிக்கப் படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்பட பல்வேறு குரூப்-2 பதவிகளில் 507 காலிப்பணியிடங்களும், உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் உள்பட குரூப்-2a பதவிகளில் ஆயிரத்து 820 காலிப்பணியிடங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 327 காலிப்பணியிடங்களுக்கு தேர்வுகள் நடைபெறுகின்றனர்.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!