Tamilnadu
ஓசூரில் ரூ.100 கோடியில் VST Tillers & Tractors நிறுவனத்தின் தொழில்நுட்ப மையம் : அசத்தும் தமிழ்நாடு அரசு!
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்து அதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை முதலமைச்சர் ஈர்த்தார். மேலும் சென்னையில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடும், முதலீட்டாளர்கள் சந்திப்புகளும் நடத்தப்பட்டு, 9 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளுக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பதற்காக அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், ஓசூரில் ரூ.100 கோடியில் உலகளாவிய தொழில்நுட்ப மையத்தை VST Tillers & Tractors நிறுவனம் அமைக்க உள்ளது.
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட VST Tillers & Tractors நிறுவனம் விவசாய உபகரணங்கள் மற்றும் டிராக்டர்கள், எலக்ட்ரிக் வாகனம் உட்பட 10 புதிய தயாரிப்புகளை உருவாக்கி வருகிறது.
இந்த புதிய தொழில்நுட்ப மையம் EV கண்டுபிடிப்புகளை வேகமாக கண்காணிக்கவும், தனியுரிம தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும், சோதனை திறன்களை அதிகரிக்கவும் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புகளை வளர்க்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நிறுவனத்தின் முதன்மை R&D மையமாக செயல்படும், உலகளாவிய R&D மையத்தை படிப்படியாக நிறுவ நிறுவனம் ரூ.100 கோடிக்கு முதலீடு செய்ய VST Tillers & Tractors நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Also Read
-
வடகிழக்கு பருவமழை... சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - விவரம் உள்ளே!
-
பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதியை கட்ட தடை கோரி வழக்கு : அபாரதத்துடன் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!
-
பீகாரில் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி தேர்வு... - அதிகாரபூர்வமாக வெளியான அறிவிப்பு !
-
திமுக ஆட்சியில் குறைந்துவரும் கொலை வழக்குகள்... தினமலரே வெளியிட்ட ஆதாரம் - முரசொலி தலையங்கம் !
-
“மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு, பழனிசாமி போல அமைதி காக்க முடியாது!” : அமைச்சர் ரகுபதி பதிலடி!