Tamilnadu
“நம் தி.மு.கழகம், இன்னும் பல நூறாண்டுகள் தமிழ்நாட்டின் ஏற்றத்துக்கு துணை நிற்கும்” - அமைச்சர் உதயநிதி!
திராவிட இயக்கத்தின் வழித் தோன்றல் தந்தை பெரியார் பிறந்த நாள் செப்டம்பர் 17, தி.மு.கழகத்தை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் செப்டம்பர் 15, தி.மு.க தோற்றுவிக்கப்பட்ட நாள் செப்டம்பர் 17 இம்மூன்றையும் ஒன்றிணைத்து முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சீரிய முயற்சியால் ஒவ்வொரு ஆண்டும் 'முப்பெரும் விழா'வாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான முப்பெரும் விழா, செப்டம்பர் 17 ஆம் தேதி சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. திடலில் வைத்து நடைபெறவுள்ளது. மேலும் இந்த ஆண்டு தி.மு.க.-வின் 75-ம் ஆண்டான பவள விழா ஆண்டும் சேர்ந்து கொண்டாடப்படவுள்ளது. திமுக தொடங்கி 75 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், இந்த விழா மேலும் சிறப்பாக பார்க்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு தி.மு.க முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டு தோறும் வழங்கப்படும் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் விருதுகள் பெறுவோர் பெயர்களை திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதன்படி,
* பெரியார் விருது - பாப்பம்மாள்
* அண்ணா விருது - அறந்தாங்கி மிசா இராமநாதன்
* கலைஞர் விருது - எஸ். ஜெகத்ரட்சகன்
* பாவேந்தர் விருது - தமிழ்தாசன்
* பேராசிரியர் விருது - வி.பி. இராஜன் - ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது.
இந்த நிலையில் முப்பெரும் விழாவை முன்னிட்டு கழக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :
பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்டு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டு, கழகத்தலைவர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டலில் வெற்றிகள் பல காணும் நம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 'முப்பெரும் விழா', சென்னையில் வரும் செப்டம்பர் 17 அன்று கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இந்த விழாவில், தந்தை பெரியார் விருது பெறவுள்ள பாப்பம்மாள் பாட்டி, பேரறிஞர் அண்ணா விருதுக்கு தேர்வாகியுள்ள அண்ணன் அறந்தாங்கி மிசா இராமநாதன்,
முத்தமிழறிஞர் கலைஞர் விருதுக்கு தேர்வாகியுள்ள மக்களவை உறுப்பினர் அண்ணன் எஸ்.ஜெகத்ரட்சகன்,
பாவேந்தர் விருதுக்கு தேர்வாகியுள்ள கழகத் தீர்மானக்குழுத் தலைவர் – அண்ணன் கவிஞர் தமிழ்தாசன்,
பேராசிரியர் விருதைப் பெறவுள்ள அண்ணன் வி.பி.இராசன் ஆகிய மூத்த முன்னோடிகளுக்கு அன்பையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பவள விழா காணும் நம் தி.மு.கழகம், இன்னும் பல நூறாண்டுகள் தமிழ்நாட்டின் ஏற்றத்துக்கு துணை நிற்கும் வகையில் அதனை மென்மேலும் வலிமையாக்கிட அயராது உழைப்போம்."
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!