Tamilnadu
வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் - ரூ.2 லட்சம் மதிப்பு பொருட்களும் கொள்ளை!
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத் துறையில் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கு சொந்தமான ஃபைபர் படகில் 5 மீனவர்கள் நேற்று (ஆக 28) மதியம் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
அப்போது கோடியக்கரை தென்கிழக்கே 10 நாட்டிக்கால் கடல் மைல் தொலைவில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த நேரத்தில், இலங்கை கடற்கொள்ளையர்கள் சுற்றி வளைத்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். மேலும் படகில் இருந்த 400 கிலோ வலை மற்றும் மீன்பிடி சாதனங்களை உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
இன்று (ஆக 29) காலை கரை திரும்பிய மீனவர்கள் கடலோர காவல்படையிடம் இந்த சம்பவம் குறித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். ஒருபக்கம் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் மறுபுறம் இலங்கை கடற்படை கைது செய்து வருவதால் மீனவ கிராமங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவியது வருகிறது.
மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு உரிய நடவ்டிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி பல முறை கடிதம் எழுதிய நிலையிலும், ஒன்றிய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
அறிவுசார் நகரத்தை நோக்கி தமிழ்நாடு - முன்னணி கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
ரூ.913 கோடி முதலீடு... 13,080 பேருக்கு வேலைவாய்ப்பு : சர்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில் புதிய ஒப்பந்தங்கள்!
-
அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகை : 10 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.822.70 கோடி.. சென்னையில் சர்வதேச தரத்தில் உருவாகும் மெகா பேருந்து நிலையம் – என்னென்ன வசதிகள் உள்ளது?
-
கைகொடுக்காத துபேவின் அதிரடி ஆட்டம்... தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த நியூசிலாந்து!