Tamilnadu
வீடில்லாமல் தவித்த மூதாட்டிக்கு உதவிய தி.மு.க MLA : நடந்தது என்ன?
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட வெட்டுக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. மூதாட்டியான இவர் குடிசை வீட்டில் வசித்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு மூதாட்டியின் குடிசை வீடு இடிந்து விழுந்துள்ளது. இதனால் வீட்டின் அருகே இருந்த கழிவறையில் வசித்து வந்துள்ளார்.
இது குறித்து விக்கிரவாண்டி தி.மு.க MLA அன்னியூர் சிவாவுக்கு தகவல் தெரியவந்துள்ளது. உடனே அவர் மூதாட்டி தங்குவதற்கு தற்காலிகமாக இரும்புத் தகட்டில் வீடு கட்டிக் கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வீடு கட்டிக் கொடுத்துள்ள அன்னியூர் சிவா எம்.எல்.ஏவுக்கு மூதாட்டி மாரிமுத்து மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். நல்ல திட்டங்களை கொண்டு வருவது மட்டுமல்லாது மக்கள் கஷ்டங்களை உடனே தீர்க்கும் அரசாகவும், திராவிட மாடல் அரசு இருப்பதற்கு இது ஒரு சான்றாகும்.
Also Read
-
பீகாரில் மகளிர் திட்டத்தில் முறைகேடு : ஆண்களின் வங்கி கணக்தில் வரவு வைக்கப்பட்ட பணம்!
-
விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை என்ன? : நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திமுக எம்.பி!
-
மாதவிடாய் சுகாதாரத் திட்டம் பயன் தருகிறதா? : ஒன்றிய அரசுக்கு தி.மு.க MP கேள்வி!
-
“GST நஷ்டத்திற்கு இழப்பீடு வேண்டும்” : நாடாளுமன்றத்தில் ராஜேஷ்குமார் MP வலியுறுத்தல்!
-
காந்தி பெயரை நீக்கதான் முடியும், இதை உங்களால் சிதைக்க முடியாது : முரசொலி தலையங்கம்!