Tamilnadu
”இதெல்லாம் அன்புமணிக்கு தெரியாது” : அமைச்சர் துரைமுருகன் பதிலடி!
ராணிப்பேட்டை அக்ராவரம் கிராமத்தில் ’மக்களுடன் முதல்வர்’ முகாம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது.
இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், ”நீர்வளத்துறை பற்றி அன்புமணிக்கு முழுமையாக தெரியாது. தி.மு.க ஆட்சியில் தான் 48 அணைகள் கட்டியுள்ளோம். காவேரி பிரச்சனை தீர்த்ததும், முல்லை பெரியாறு அணை பிரச்சனை தீர்த்ததும் தி.மு.க தான்.
யார் வேண்டுமென்றாலும் அரசியல் கட்சி தொடங்கவும், அரசியல் செய்யவும் கொடி ஏற்றவும் உரிமை உண்டு. அதை யாரும் தடுக்க முடியாது. இது ஜனநாயக நாடு” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“தந்தை பெரியார், அம்பேத்கர் பெயர் நீக்கம் என்பது ஒரு திட்டமிட்டச் செயல்!”: மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!
-
“மரியாதையும், பாதுகாப்பான கல்விச்சூழலும் கிடைப்பது குழந்தைகளின் உரிமை!” : கனிமொழி எம்.பி!
-
கிரிக்கெட் விளையாட்டு : பந்து தலையில் தாக்கி 11 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம் - காஞ்சியில் அதிர்ச்சி!
-
கிராண்ட் ஸ்லாம் ஓபன் டென்னிஸ் இன்று தொடங்குகிறது.. கோடிகளில் பரிசுத் தொகை.. களமிறங்கும் முன்னணி வீரர்கள்!
-
திமுக தலைவருக்கான பாதுகாப்பு குறைப்பு.. தவெக அரசின் அரசியல் உள்நோக்கமா? : தலைவர்கள் கடும் கண்டனம்!