Tamilnadu
”தமிழ்நாட்டின் தீங்கு ஹெச்.ராஜா” : அமைச்சர் சிவசங்கர் பதிலடி!
அரியலூரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கிராம ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளுக்கு 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 150 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர்," சென்னையில் தாழ்தள பேருந்துகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மின்சார பேருந்துகள் வாங்குவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் முடிவடைந்த பிறகு மின்சார பேருந்துகளும் செயல்பாட்டிற்கு வரும். போக்குவரத்து துறையில் பொது மக்களுக்கு தேவையான தொழில்நுட்ப வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் சென்னை மாநகரத்தில் கையடக்க கருவி மூலம் டிக்கெட் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன் பிறகு அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் அனைத்து போக்குவரத்து கழகத்திலும் அறிமுகப்படுத்தப்படும். கமெண்ட் அடிக்கும் ஹெச்.ராஜாவை மக்கள் ஒதுக்கிவிட்டார்கள்
எடப்பாடி பழனிச்சாமி ஒரு விபத்தில் முதலமைச்சரானவர். அடிப்படை அரசியல் கூட எடப்பாடி பழனிசாமிக்கு கிடையாது. ஜெயலலித்தா அவர்களுக்குகூட விழா எடுக்காமல் இருந்தவர்தான் பழனிசாமி. முதலில் அவர் தனது முதுகை பார்க்கட்டும் பிறகு மற்றவர்களை விமர்சிக்கட்டும்." என தெரிவித்துள்ளார்.
Also Read
-
BLINKIT வணிக தளத்தில் ‘கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகள்!’ : முழு விவரம் உள்ளே!
-
இரட்டை இலக்கை எட்டிய தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமை!
-
“சாதி ஆணவப் படுகொலையை தடுக்க தனிச் சட்டம் உருவாக்கப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“சிபிஐ விசாரிக்கப்பட வேண்டிய முதல் நபர் விஜய்தான்” - ‘தி இந்து’ தலையங்கத்தை மேற்கோள் காட்டிய ‘முரசொலி’!
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!