Tamilnadu
பட்டியலின வாலிபர் மீது கொடூர தாக்குதல்... பாஜக நிர்வாகி மீது பாய்ந்த வன்கொடுமை தடுப்புச் சட்டம் !
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே காந்தி நகரை சேர்ந்தவர் சங்கர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காங்கேயம் - கோவை ரோட்டில் ஸ்ரீ அருள் ஆட்டோ பைனான்ஸ் நடத்தி வரும், பாஜக தெற்கு ஒன்றிய பொதுச்செயலாளராக உள்ள சதீஷ் குமார், என்பவரிடம் மாதத் தவணையில் பழைய இரு சக்கர வாகனம் வாங்கியுள்ளார்.
அதற்கு மாதம் ரூ.2,400 வீதம் கட்ட வேண்டும். ஆனால் இவர் கடந்த 4 மாத தவணையை கட்டாமல் இருந்துள்ளார். இதனால் பாஜக நிர்வாகி சதீஷ் குமார், சங்கரை இன்று தனது ஊழியர்கள் மூலம் வரவழைத்து அலுவலகத்தில் வைத்து ஜாதி பெயரை குறிப்பிட்டு தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு ஆளான வாலிபர் சங்கர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் சங்கர் தன்னை ஜாதி பெயரை குறிப்பிட்டு தாக்குதல் நடத்திய பாஜக நிர்வாகி சதீஷ் குமாரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி அளித்த புகாரின் பேரில் காங்கேயம் போலீசார், காங்கேயம் பாஜக தெற்கு ஒன்றிய பொதுச்செயலாளர் சதீஸ்குமார் மீது 115 (2), 127 BNS, SC/ST வன்கொடுமை வழக்கில் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாஜக நிர்வாகியால் தாக்குதலுக்கு ஆளான சங்கர், திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்த படி தாக்குதல் குறித்து பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Also Read
-
“இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும்!” : இலங்கை பிரதமரின் இந்திய வருகையையொட்டி முதல்வர் கடிதம்!
-
“WhatsApp வதந்திகளை மட்டும் நம்பி உயிர் வாழும் பழனிசாமி” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
"கருத்து தெரிவிக்கும் அதிகாரம் கூட ஆளுநருக்கு கிடையாது" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் தீர்மானம் !
-
ராணுவ அதிகாரி மீதான விமர்சனம்... பாஜக அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி இடமாற்றம் !
-
பீகார் SIR : பா.ஜ.க.வை வெற்றி பெற வைக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது - முரசொலி விமர்சனம் !