Tamilnadu
சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்படும் புறநகர் ரயில்கள் விவரம் : சென்னை கோட்ட நிர்வாகம் தகவல் !
சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் காலை 9.20 முதல் பகல் 1.30 வரையும், இரவு 10.30 முதல் அதிகாலை 2.45 மணி வரையும் ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கூடுதலாக தாம்பரத்தில் இருந்து காலை 7.17, 8.19 , 9.22, 9.40, 9.50 மணிக்கும், மாலை 6.26, 7.15 மணிக்கும் புறப்படும் ரயில்கள் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் ஆகஸ்ட் 14 வரை ரத்து செய்யப்படும் எனவும் முன்னதாக, சென்னை கடற்கரை-பல்லாவரம் இடையே 20 நிமிஷங்களுக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வஃயில், கடற்கரையிலிருந்து காலை 9.30 முதல் பகல் 12.45 மணி வரையும், மறுமாா்க்கமாக பல்லாவரத்தில் இருந்து காலை 10.17 முதல் பிற்பகல் 1.42 மணி வரையும் 15 நிமிஷங்களுக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படும் என சென்னை கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும் இரவு 10.40, 11.05, 11.30, 11.59 மணிக்கும், மறுமாா்க்கமாக பல்லாவரத்திலிருந்து இரவு 11.30, 11.55 மணிக்கும் கடற்கரைக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும். அதுபோல், தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு காலை 8.26 மற்றும் காலை 8.39 மணிக்கு புறப்படும் பெண்கள் சிறப்பு மின்சார ரயில் பொது ரயிலாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
அதே போல் சென்னை செண்ட்ரல் மூா் மாா்க்கெட் வளாகத்தில் இருந்து இரவு 11.40, 12.05 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்களும், பட்டாபிராமில் இருந்து ஆவடிக்கு இரவு 11.50 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும் இன்று மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.2, 4) ரத்து செய்யப்படும். ஆவடியில் இருந்து பட்டாபிராமுக்கு அதிகாலை 3 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் சனி மற்றும் திங்கள்கிழமை (ஆக.3, 5) ரத்து செய்யப்படும் என சென்னை கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது
Also Read
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
சென்னை மெட்ரோ ரயிலுக்கு நாளுக்கு நாள் ஆதரிக்கும் பொதுமக்களின் ஆதரவு : ஆகஸ்ட்டில் 99.09 லட்சம் பேர் பயணம்!
-
திராவிட மாடல் அரசு நிதி வீணாகவில்லை : Köln பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர்!
-
ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் : உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!