Tamilnadu
BSP மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி... தலைமறைவான பாஜக நிர்வாகி !
கடந்த சில தினங்களுக்கு முன்பு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு மற்றும் திருவேங்கடம் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே கடந்த வாரம் ரவுடி திருவேங்கடத்தை மாதாவரம் பகுதியில் மறைத்து வைத்துள்ள ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக அழைத்துச் சென்றுள்ளனர். அப்பொழுது ஆட்டுச் சந்தை பகுதியில் திருவேங்கடம் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தைக் கொண்டு போலீசாரை தாக்கி தப்ப முயன்றுள்ளார்.
இதன் காரணமாக போலீசார் தற்காப்பிற்காக திருவேங்கடத்தை சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதில் அவர் உயிரிழந்துள்ளார். பின்னர் சுட்டு வீழ்த்தப்பட்ட திருவேங்கடத்தின் உடலானது பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை தீவிரம் அடைந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைச் சதியில் தொடர்புடைய அதிமுக திருவல்லிக்கேணி மேற்கு பகுதிக் கழக இணைச் செயலாளர் மலர்கொடி சேகர் என்பவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், வழக்கில் முக்கிய குற்றவாளியான பாஜகவின் மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் அஞ்சலை என்பவர் தலைமறைவாகியுள்ளார். இந்த வழக்கில் அதிமுக-பாஜக தொடர்பு வெளிவந்த நிலையில், இதன் காரணமாகதான் எடப்பாடியும்-அண்ணாமலையும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று கேட்டார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வரக்கூடிய பாஜக பிரண்ட் பிரமுகர் அஞ்சலை கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் நெருங்கிய தோழி என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அஞ்சலை ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தை அரங்கேற்றுவதற்காக ரூபாய் பத்து லட்சம் பணம் கொடுத்ததாகவும் மேலும் கொலை சம்பவத்தை அரங்கேற்றுவதற்காக ஆட்களை அனுப்பி உழவு பார்த்ததாகவும் தெரியவந்துள்ளது.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !