Tamilnadu
”முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தை அடுத்து தமிழ்நாட்டில் IT துறை வளர்ச்சியடையும்” : அமைச்சர் PTR!
தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தின் முதலாவது ஆண்டு தினத்தையொட்டி உலகளாவிய புத்தாக்கத்தினை ஊக்குவிக்கும் நோக்கில் சர்வதேச பங்குதாரர்கள், தொழில்முனைவர்கள், புத்தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்ட கருத்துரையாடல் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில் நுட்ப துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ் குமார், மாநில திட்ட குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கல்வியியல் ஆராய்ச்சியாளர்கள், புத்தாக்கத்தோர் மற்றும் மாணவத் தொழில் முனைவோருக்கு ஆதரவளிப்பதன் மூலம் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகளை வளர்ப்பதற்கு 50 உயர் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்," முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த அரசு பொறுப்பேற்ற உடன் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் புது முயற்சிகள் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கபட்டு வருகிறது. உலகத்திலேயே முதல் இடத்தில் திறன் வளர்க்கும் மையமாக தமிழ்நாடு திகழ்கிறது.
தொலை நோக்கு பார்வையுடன் இளைஞர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த வகையில் ஊக்குவிக்கும் வகையில் முயற்சிகளை அரசு மேற்கொள்ளபட்டு வருகிறது. Artificial Intelligence கொள்கை மூலம் தமிழகத்தில் வரும் காலங்களில் அதிக வேலைவாய்ப்பு மற்றும் புதிய தகவல் தொழில்நுட்ப சார்ந்த நிறுவனங்கள் ஈர்க்கப்படும். விரைவில் முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை சந்திக்க உள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பதுறையில் பல முன்னேற்றங்கள் ஏற்படும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
இதற்கெல்லாம் பதில் வருமா? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கேள்வி எழுப்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தீபாவளிக்கு அடுத்தநாள் பொதுவிடுமுறையா? : தமிழ்நாடு அரசின் அறிவிப்பு என்ன?
-
முதலமைச்சரின் தீர்மானம் - “இதெல்லாம் ஆர்.என்.ரவிக்கு உறைக்குமா ?” :ஆளுநரை வெளுத்து வாங்கிய ‘முரசொலி’ !
-
”இடஒதுக்கீடு கொள்கையின் பிதாமகன் தமிழ்நாடு” : சட்டப்பேரவையில் அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
”இன்ஸ்டா ரீல்ஸ் அரசியல் செய்யும் பழனிசாமி” : அமைச்சர் சிவசங்கர் பதிலடி!